தோழர் எம்.குப்புசாமி காலமானார்
தருமபுரி, அக்.12- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.குப்பு சாமி சனியன்று காலமா னார். தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி வட் டம், துரிஞ்சிப்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் தோழர் எம்.குப்புசாமி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிபட்டி வட்டக்குழு உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டார். விவசாயிகள் சங்கம், குறவர் பழங்குடி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் செயல்பட்டு, மக்க ளுக்கான போராட்டத்தை அப்பகுதியில் முன்நின்று நடத் தியவர். இந்நிலையில், சனியன்று அவர் காலமா னார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து, வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், மலைவாழ் மக் கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ், வட்டக் குழு உறுப்பினர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தி னர்.
