tamilnadu

img

தோழர் தேவ.பேரின்பனின் நினைவுதின ரத்ததான முகாம்

தோழர் தேவ.பேரின்பனின் நினைவுதின ரத்ததான முகாம்

தருமபுரி, செப்.14- தோழர் தேவ.பேரின்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு, வாலிபர் சங்கம்  சார்பில் ரத்ததான முகாம் நடைபெற் றது. மார்க்சிய அறிஞர் தோழர் தேவ. பேரின்பன் அவர்களின் 12 ஆம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்ட  துணைச்செயலாளர் எம்.சிலம்பரசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். தோழர் தேவ.பேரின்பன் உருவப்படத் துக்கு மாவட்டச் செயலாளர் பி. கோவிந்தசாமி மாலை வைத்து மரி யாதை செலுத்தினார். ஆரம்ப சுகாதார  மருத்துவ அலுவலர் வே.சக்திவேல், ரத்த வங்கி அலுவலர் கண்யா ஆகி யோர் பங்கேற்று பேசினர். இந்நிகழ் வில், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே. விஸ்வநாதன், வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் எம்.குறளரசன், மாவட்ட  துணைத்தலைவர் வி.ரவி, விவசாயிகள்  சங்க நிர்வாகி ஆர்.சின்னசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் கட்சியின் பகுதிச் செய லாளர் ஆர்.சக்திவேல், வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் லோகநாதன், துரை மணி, பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.