tamilnadu

img

அடிக்கடி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வீணாவதாக புகார்

அடிக்கடி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வீணாவதாக புகார்

உடுமலை,செப்.13- திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிமங் கலம் ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கொண்டம்பட்டி ஊராட்சி யில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு  பல நாட்களாக தண்ணீர் வீணாகிறது.  இதை உடனடியாக சரி செய்ய வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் ஒன்றியத்தில் 158 குடியிருப்பு பகுதி கள், மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில்  இருக்கும் 318 குடியிருப்புப் பகுதி கள், கணியூர், சங்கரமநல்லூர்,  கொமரலிங்கம் மற்றும் தளி பேரூ ராட்சி ஆகிய பகுதிகளின் குடிநீர்  தேவைக்காக தினமும் சுமார் 44 மில்லி யன் லிட்டர் தண்ணீர் அணையில் இருந்து எடுக்கப்படுகிறது.  திருமூர்த்தி அணையில் போதிய  தண்ணீர் இருந்தாலும், ஊராட்சி பகு திகளில் குடிநீர் தட்டுப்படுப்பாடு ஏற்ப டுவதால், தினமும் ஏதாவது ஒரு பகு தியில் போராட்டம் நடைபெற்று வரு கிறது. பொது மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யும் கூட்டு குடிநீர் திட்டத் தின் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வரு கிறது என அடிக்கடி புகார்கள் வருகி றது. மேலும், பல நாட்கள் தண்ணீர்  வீணாவது குறித்து புகார் தெரிவித்தா லும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களை கேட்ட போது,  அணையில் இருந்து பொது மக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முன்பு வாரியத்தின் ஊழியர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது  குழாய்கள் பராமரிப்புப் பணிகளை  மேற்கொள்ளவும், விநியோகம் செய்யவும் தனியார் நிறுவனங்க ளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் குறைவான எண் ணிக்கையில் பணியாளர்களை வைத்து, வேலை செய்வதால் தான்  குடிநீர் பிரச்சனை வருகிறது என்ற னர். மக்களின் அடிப்படை தேவை யான குடிநீர் விநியோகத்தை சேவையாக கருத வேண்டிய அரசு  தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந் தம் விடுகிறது. லாப நோக்கில் தனி யார் நிறுவனங்கள் குறைவான ஆட் களை வைத்து வேலை செய்வதால்,  செயற்கையாக குடிநீர் பற்றாக்குறை  ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியமே இப்பணிகளை மேற் கொண்டால் மட்டுமே இப்பிரச்சணை  தீர்வு ஏற்படும் என இப்பகுதி அரசி யல் கட்சியினர் தெரிவித்தனர்.