tamilnadu

img

ஒன்றுபட்ட தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம் தோழர் தேவ.பேரின்பன் நினைவு தினத்தில் புகழாரம்

ஒன்றுபட்ட தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம்! தோழர் தேவ.பேரின்பன் நினைவு தினத்தில் புகழாரம்

தருமபுரி, செப்.17- ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத் தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடை யாளமாக திகழ்ந்தவர் தோழர் தேவ.பேரின்பன் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் செ.முத்துக்கண்ணன் புகழா ரம் சூட்டினார். மார்க்சிய அறிஞர் தோழர் தேவ. பேரின்பன்-னின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் புதனன்று அனுசரிக் கப்பட்டது. திருமல்வாடி, கிட்டம் பட்டியிலுள்ள அவரது நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதன்பின் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன் பேசுகையில், சமூகத்தில் மக்களின் வாழ்நிலை எப்படி உள் ளது? எதை நோக்கி செல்லும் மக்க ளின் வாழ்நிலை எப்படி மாறும்? என்பது குறித்து கம்யூனிஸ்ட் தலை வர்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகி யோர் விஞ்ஞானப் பார்வையில் தீர்வு கூறியுள்ளனர். இந்தியாவில் இதை  மார்க்சிய அறிஞர்கள் இ.எம்.ஈஸ். நம்பூதிரிபாட் முதல் தேவ.பேரின் பன் வரை, மார்க்சியம் என்பது விஞ் ஞானம் என மக்களிடையே எடுத்து சொன்னார்கள். மார்க்சியத்தை அறிவியல் பார்வையில் சமூகத் தில் பொறுத்த முடியும். அரசியல், கலாச்சாரம், தத்துவம், சமூகம் என  எல்லா தளத்திலும் பன்முகத்தன் மையோடு செயல்பட்டவர் தோழர் தேவ.பேரின்பன். சமூகத்தில் நில வும் பிரச்சனையை தத்துவார்த்த கண்ணோட்டத்தில் அனுகியவர். ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையா ளமாக திகழ்ந்தார். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வர்ண ரீதியாக சாதியை பிரித்தனர். இந்தியாவில் ஆரியர் வருகைக்கு பின் புதிய நிலைமை உருவானது. குடும்பத் திற்கு தனி சொந்தானது. அரசு உரு வானது. சமூக அமைப்புமுறை உரு வாக்கப்பட்டது. அன்றைக்கு உரு வான வர்ண சாதிய அடிப்படையில் வேலை பிரிவினையை உருவாக் கினர். வேலை பிரிவினையில் நேரடி யாக ஈடுபட்டவர்களை சூத்திரர்கள் என பெயரிட்டனர். இதுதான் ஆரம்ப இந்தியா. வர்ணம் அடிப்படையில் உழைப்பாளி மக்களை சுரண்டினர். குறிப்பாக. நில உடமையாளர்கள் சுரண்டல் வேலையில் ஈடுபட்டனர். சுரண்டி கொளுப்பதற்கு கண்டு பிடித்ததுதான் சாதி. இதுதான் மனுதர்மம் உருவாக்கிய கட்ட மைப்பு. வேலை பிரிவினை அடிப் படையில் சாதிக்குள் உபசாதிகள் உருவாக்கப்பட்டது. உயர் சாதி  பிரிவினர், உரிமைகளை அனுப விக்க மட்டுமே என்ற கட்டமைப்பு உருவானது. அப்போது ஆண் என் றால் அனுபவிக்க பிறந்தவர்கள் என்ற நிலை உருவாகிறது. பெண் என்றால் புனிதம், தீட்டு என்று ஒதுக்கி வைத்தனர். பெண்களை அடிமைப்படுத்தி, சாதி தன்னை மேம்படுத்திக் கொண்டது. இது போன்ற பழமைவாத கருத்துக ளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தற்போது, மயிலாடுதுறையில் வாலிபர் சங்க தலைவர் வைர முத்து 10 ஆண்டுகாலமாக காத லித்து வந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக ஆணவப்படு கொலை செய்யப்பட்டார். பெண் ணின் தாய் தூண்டுதலின் பெயரில் இந்த படுகொலை நடந்துள்ளது. சாதியை முதன்மைப்படுத்த பெண் களை பயன்படுத்துகின்றனர். சாதி யின் பெயரால் நடக்கும் கொடுமை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும். இன்றைக்கு இந்துத் துவா என்ற பெயரில் பழமைவாத  கருத்துக்களை திணித்து, அடை யாள அரசியல் மூலம் ஆதாயம்  தேடுகின்றனர். இதற்கு எதிராக  நாம் போராட வேண்டும். எனவே  தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தேர்தலில் வாக்கு விகிதாச்சார பிர திநிதித்துவத்தை வலியுறுத்துகி றது. 545 நாடாளுமன்ற உறுப்பினர் களில் 480 பேர் கோடீஸ்வரர்கள். சாதியின் அடிப்படையிலும், பணத் தின் அடிப்படையில் நாடாளுமன்ற  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்  நிலை உள்ளது. இதனை எதிர் கொள்ள நம் அரசியலை மக்களி டையே கொண்டு செல்ல வேண்டும்,  என்றார். இந்நிகழ்வில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் சோ.அருச்சுனன், எம்.முத்து, சக்திவேல், தி.வ.தனுசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.