tamilnadu

img

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை, அக்.10- சரியாக சிகிச்சை அளிக்காததால் மாணவர் உயிரிழந்த தாகக் குற்றஞ்சாட்டி, சக மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையை சேர்ந்த வசந்தகுமார் (19) என்பவர், கோவையில் தங்கியிருந்து அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு வசந்தகுமார், இருசக்கர வாகனத்தில் சுங்கம் சாலையில் சென்றபோது, வளைவில் வந்த மினி வேன் திடீ ரென கட்டுப்பாட்டை இழந்து வசந்தகுமார் மீது மோதி யுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவ் வழியாக சென்றவர்கள், வசந்தகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளி யன்று காலை வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்து சக மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். வசந்தகுமாருக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்து விட்டதா கக்கூறி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த பந்தையசாலை காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப் படுத்தினர்.