தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்க பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு சிஐடியு கடிதம்
திருப்பூர், செப். 17 - திருப்பூர் பனியன் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்ப ளம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பனியன் அன்ட் பொதுத் தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) திருப்பூரின் பின்ன லாடை உற்பத்தியாளர் சங்கங்களுக் குக் கடிதம் எழுதியுள்ளது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி யாளர் சங்கங்களுக்கும், தொழிற்சங் கங்களுக்கும் இடையே பனியன் தொழி லாளர் சம்பள உயர்வு குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தி நான்காண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு உடன்பாடு காணப்படுகிறது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. நான்காண்டுகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் இந்த ஒப்பந்தம் காலாவ தியாகிறது. எனவே புதிய சம்பள உயர்வு ஒப்பந் தம் காண வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் பனியன் தொழிலாளர்களுக்கு புதிய சம் பள உயர்வு கோரிக்கை குறித்து புத னன்று சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கடிதம் அனுப்பி யுள்ளார். கோரிக்கைகள் இதில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பனியன் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச அடிப் படை சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பீஸ் ரேட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நடை முறைச் சம்பளத்தில் 90 சதவிகிதம் உயர்வு வழங்க வேண்டும். 1936ஆம் ஆண்டு விலைவாசி குறி யீட்டு எண் 15 ஆயிரத்திற்கு மாதம் ரூ. 5000மும், அதற்கு மேல் உயரும் ஒவ் வொரு புள்ளிக்கும் 50 பைசா வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். பயணப்ப டியை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வாடகை: பனியன் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டு வாடகைக்கு செலவிட வேண்டியுள் ளது. எனவே அனைத்து தொழிலாளர்க ளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வீட்டு வாட கைப்படி வழங்க வேண்டும். 100 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலை நிர்வாகங்கள் தொழிலா ளர் குடும்பங்களுடன் வசிக்க குடியி ருப்பு வசதிகள் செய்து தர வேண்டும். மிகை நேர (ஓவர்டைம்) வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் படியில் இருந்து 100 சதவிகிதம் உயர்வு வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகை 5ஆம் வகுப்பு வரை ரூ.2500, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், உயர் கல்விக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்க வேண்டும். இரு பால் தொழிலாளர்க ளுக்கும் திருமண உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மொத் தம் பணி செய்த காலத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும். பனியன் தொழிலா ளர் குடும்பங்களுக்கு குடும்பப் பாது காப்பு கருதி ரூ.5 லட்சம் குழுக் காப்பீடு பெற்றிட கம்பெனி நிர்வாகம் பிரீமியம் செலுத்த வேண்டும். குடும்ப நல உதவித்தொகை: பணிக் காலத்தில் இயற்கை மரணம டையும் தொழிலாளர்களுடைய குடும் பப் பாதுகாப்பு நிதியாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர ஆண்டுக்கு ஒரு முறை விடுமுறையுடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் அல் லது நிர்வாகம் பொறுப்பேற்று சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். 250 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் பனியன் நிறுவனங்களில் கூட் டுறவு சிக்கன கடன் சங்கம் உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஆண் டுக்கு ஒரு முறை முழு உடல் மருத்து வப் பரிசோதனை செய்ய நிர்வாகம் ஏற் பாடு செய்து தர வேண்டும். செக்கிங் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கையில் அமர்ந்து வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண் தொழிலா ளர்களுக்கு ஆறு மாதம் பிரசவ கால விடு முறை வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டம் அமலாக்குக தொழிலாளர் வாகனம் நிறுத்த பாது காப்பான இட வசதி, பீஸ் ரேட் தொழிலா ளர்களுக்கு சட்டப்படி நஷ்ட ஈடு, கிராஜு விட்டி, ஓய்வு விடுமுறை சம்பளம், நோட் டீஸ் சம்பளம் வழங்க வேண்டும். இவர் களுக்கு ஒப்பந்த சம்பளம், தேசிய பண்டிகை விடுமுறை சம்பளம் அனைத்து நிறுவனங்களும் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். வேலை யில்லா நாட்களுக்கு நோ ஒர்க் சம்பளம், ஓவர் டைம் மற்றும் விடுமுறை நாட்க ளில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்ப ளம் வழங்க வேண்டும். வாரச் சம்பளம் பிரதி வாரம் சனிக்கிழமையும், மாதச் சம்பளம் பிரதி மாதம் 7ஆம் தேதிக்குள் ளும் வழங்க வேண்டும். சம்பளம் வழங் கும்போது இஎஸ்ஐ, பி.எப்., பிடித்தம், பயணப்படி, பஞ்சப்படி உள்ளிட்ட விப ரங்களுடன் சம்பளப் பட்டியல் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். நூறு பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் குறைந்த விலை உணவகம் அமைக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர் சட்டம் 1979 அடிப்ப டையில் சட்ட உரிமைகளை அமலாக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்க ளுக்கும் சுத்தமான குடிநீர், ஞாயிறு வார விடுமுறை, ஆலைகளில் தேவையான அளவு இருபாலருக்கும் தனித்தனி கழி வறைகள், பெண் தொழிலாளர் சட்டங் கள் அமலாக்கம், ஓய்வறை, குழந்தை கள் காப்பகம், முதலுதவிப் பெட்டி, சானிட்டரி நாப்கின், மருத்துவ வசதி உறு திப்படுத்த வேண்டும். ஒப்பந்தம் காலாவதியான நாட்க ளுக்குப் பின் புதிய ஒப்பந்தம் ஏற்படும் நாள் வரையில் இடையில் உள்ள வேலை நாட்களுக்கு, புதிய ஒப்பந்தப் படி பின்பாக்கி சம்பளம் வழங்க வேண் டும் என்று சிஐடியு கோரியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தி யாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றும தியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) மற்றும் பின்னலாடைத் துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) உள்ளிட்ட உற்பத்தியாளர் சங்கங்க ளுக்கு சிஐடியு சார்பில் புதிய சம்பள உயர்வு கோரிக்கைப் பட்டியல் அனுப் பப்பட்டுள்ளது என சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தெரிவித்தார்.