பஞ்சாலைத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்குழுவை விரைந்து அமைக்க சிஐடியு வலியுறுத்தல்
திருப்பூர், ஆக. 7 - பஞ்சாலைத் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்து குழுவைப் புதுப் பித்து விரைந்து சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட பஞ்சா லைத் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் மகாசபை உடுமலைபேட்டையில் புதன்கி ழமை நடைபெற்றது. மாவட்டத் தலை வர் கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபையை தொடக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் பேசினார். மாவட் டச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி வேலையறிக்கையை முன்வைத் தார். பொருளாளர் எஸ்.ஜெயப்பிர காஷ் வரவு செலவு விபரத்தை முன் வைத்தார். இம்மகாசபையில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நீண்ட காலம் நிறைவேற்றாமல் இருக்கும் சம்பள உயர்வு குறித்து விரைந்து அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய உயர்வுக் குழுவை புதுப்பித்து சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த் துப் போகச் செய்யும் 44 தொழிலா ளர் சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஈபிஎப் ஓய் வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ தியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகாசபையில் கியூபா ஒரு மைப்பாட்டு நிதியாக ரூ.1150 வசூ லித்து ஒப்படைக்கப்பட்டது. இந்த மகாசபையில் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக எம்.செல்வராஜ், மாவட்டப் பொதுச் செயலாளராக சி.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவராக ஏ.சண்முகம், துணைச் செயலாளராக எஸ்.ஜெயப் பிரகாஷ், பொருளாளராக கே.பழ னிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இந்த மகாசபையில் பெண் தொழிலாளர் உள்பட 50 பேர் பங் கேற்றனர்.