tamilnadu

img

தூய்மைப்பணியாளர்களை நிரந்திரம் செய்ய சிஐடியு வலியுறுத்தல்

தூய்மைப்பணியாளர்களை நிரந்திரம் செய்ய சிஐடியு வலியுறுத்தல்

தருமபுரி, செப். 7 – மூன்று ஆண்டுகாலம் பணி செய்த  தூய்மை பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என சிஐடியு தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழி யர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 6 ஆவது மாநாடு தருமபுரி சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சி. குட்டியப்பன் தலைமை வகித்தார். விஜயலட்சுமி வர வேற்றார். மூத்த தலைவர் ஆர்.ராம மூர்த்தி சங்க கொடியேற்றினார். புஷ்பா  அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் சி.அங் கம்மாள் மாநாட்டை துவக்கி வைத்தார்.  செயலாளர் டி.வெங்கட்ராமன், பொரு ளாளர் சி.மணிகண்டன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். இதில்,  சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகரா சன், மாவட்டச் செயலாளர் பி.ஜிவா ஆகி யோர் உரையாற்றினர். இதில், தூய்மைப் பணியாளர்க ளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு குறை வாக ஊதியம் நிர்ணயித்த மாவட்ட  ஆட்சியரின் உத்தரவை திரும்பப்  பெறவேண்டும். மக்கள் தொகை விரி வாக்கத்திற்கு ஏற்ப பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும. மூன்று  ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த  அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண் டும். நிரந்தர தொழிலாளி ஓய்வு பெறும்  நாளன்றே பணப்பலனை வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.  மாநாட்டில், கெளரவத் தலைவராக ஆர்.ராமமூர்த்தி, தலைவராக சி.நாகரா சன், செயலாளராக ஏ.சேகர், பொரு ளாளர் சி.மணிகண்டன், துணைத் தலை வராக ஆர்.செல்வம் உள்ளிட்ட 28 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது.