ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை உடனே திறக்க சிஐடியு வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.11- திருப்பூர் - அவிநாசி சாலையில் கட்டி முடித்து ஆண்டுக்கணக்கில் திறக்கப்படாமல் இருக்கும் ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலு வலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட 14 ஆவது மாநாடு திருப்பூர் தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில் (காமாட்சியம்மன் திருமண மண்ட பம்) ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் நாள் மாநாட்டில், சிஐடியு மாநிலச் செய லாளர் ராஜேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருப் பூர் மாவட்டச் செயலாளர் அ.பஞ்ச லிங்கம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த தொழி லாளர் துறை அலுவலகத்தை உட னடியாகத் திறக்க வேண்டும். விசைத்தறித் தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட குழு காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தையல் தொழிலைப் பாதுகாக்க தொழிலா ளர்களுக்கு தையல் இயந்திரம் வழங்க வேண்டும். கைத்தறி தொழி லைப் பாதுகாக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள், மக்கள் ஒற்று மையைச் சீர்குலைக்கும் மதவாத பிற்போக்கு சக்திகள், கலவரத் தைத் தூண்டுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையில் தூய்மைப் பணி உள்ளிட்ட அயல்பணி வழங் குவதைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்துவதுடன், காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஞாயிறன்று மாநாட் டில் கியூபா ஒருமைப்பாட்டு நிதி வசூலிக்கப்பட்டு ரூ.19 ஆயிரத்து 450ஐ சிஐடியு அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாப னிடம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் தேர்வு இதையடுத்து சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் - ஜி.சம்பத், மாவட்டச் செயலாளர் - கே.ரங்க ராஜ், மாவட்டப் பொருளாளர் - ஜெ. கந்தசாமி, மாவட்டத் துணைத் தலைவர்கள் - கே.உண்ணிகிருஷ் ணன், என்.கனகராஜ், பி.முத்துசாமி, கே.குப்புசாமி, என்.சுப்பிரமணி, எம்.கணேசன், கே.எல்லம்மாள், துணைச்செயலாளர்கள் - டி.குமார், பி.பாலன், ஒய்.அன்பு, பி.செல்ல துரை, எம்.ஆறுமுகம், எஸ்.ஜெகதீ சன், கே.சித்ரா, பி.ராமலிங்கம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர் கள் தவிர 30 பேர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து சிஐடியு மாநிலச் செயலா ளர் கே.சி.கோபிகுமார் உரையாற்றி னார். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் என்.சுப்பிரமணி நன்றி கூறினார்.