ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 29- மாதந்தோறும் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள் ளது. மக்களவைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவைக்கூட்டம், திங்க ளன்று சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டப் பொறுப்பாளர் சி. அங்கம்மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் எஸ்.திலகவதி வரவேற்றார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் லோகநாயகி, பொருளாளர் ஏ.பழ னியம்மாள் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலா வதி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இக்கூட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பணிவ ரன் முறைப்படுத்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங் கத்தின் மாவட்டத் தலைவராக ஆர். லோகநாயகி, செயலாளராக எஸ். திலகவதி, பொருளாளராக ஏ.பழனி யம்மாள் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன் நிறைவுரை யாற்றினார்.
மாநில மாநாடு: வரவேற்புக்குழு அமைப்பு
மக்களவைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு தருமபுரியில், அக்.5 ஆம் தேதியன்று பேரணி பொதுக் கூட்டத்துடன் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத் துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம், சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மருத்துவர் கே.பகத் சிங், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்டச் செயலாளர் சி.கவிதா, மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.மகாலட்சுமி, பொரு ளாளர் பி.காயத்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைய டுத்து வரவேற்புக்குழு தலைவராக கே.பகத்சிங், செயலாளராக சி. நாகராசன், பொருளாளராக சி.அங்கம்மாள் தேர்வு செய்யப்பட்ட னர்.