tamilnadu

img

சிஐடியு பொதுத் தொழிலாளர் மகாசபை

சிஐடியு பொதுத் தொழிலாளர் மகாசபை

உடுமலை, ஜீலை 28 - உடுமலை தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) 8ஆவது மகாசபை ஞாயிற்றுக்கிழமை உடுமலை கொங்கு நாடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் வெ  ரங்கநாதன் தலைமை ஏற்றார். எஸ்.சாமிதுரை வரவேற் றார். மகாசபையைத் தொடக்கி வைத்து சிஐடியு மாவட்ட குழு  உறுப்பினர் விஸ்வநாதன் பேசினார். கட்டுமான தொழிலா ளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் கி கனகராஜ் வாழ்த்திப்  பேசினார். தையல் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலா ளர் பி.ரத்தினசாமி, மோட்டார் சங்க நிர்வாகி சுதா சுப்பிரமணி யம், அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி கி.எல்லம்மாள் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொழிலா ளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும், நல வாரிய  உதவித் தொகைகளை இருமடங்காக உயர்த்தி வழங்க  வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கியூபா நாட்டு மக்களுக்கு ஆதரவு நிதி ரூ.2050 இம் மகாசபையில் சேகரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. சங்கத் தலைவராக வெ.ரங்கநாதன், துணைத் தலை வர்கள் என்.பாபு, விஸ்வநாதன், செயலாளர் எஸ்.ஜெகதீசன்,  துணைச் செயலாளர் நந்தினிதேவி, எல்.ஆஜிக் அலி, பொரு ளாளர் ஆர்.ஜோசப் மற்றும் 12 பேர் நிர்வாகக்குழு உறுப் பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.  திருப்பூர் மாவட்ட  சிஐடியு தலைவர் ஜி.சம்பத் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரை ஆற்றினார். பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் எல்.ஆஜிக் அலி  நன்றி கூறினார்.