சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் காந்திராஜ் தலைமையில், அம்பேத்குமார் அருண்குமார், கருமாணிக்கம், சின்னதுரை, சுதர்சனம், சேவூர் எஸ் ராமச்சந்திரன், எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் உதகை லவ்டேல் பகுதியில் மாநில நெடுஞ்சாலை, தீட்டுக்கல்லில் உள்ள பொதிக்காளை உறை விந்து உற்பத்தி மையத்தில் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவ்யா உடனிருந்தார்.