tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிபிஐ நிர்வாகிகள் தேர்வு

கோவை, செப்.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது கோவை மாவட்ட மாநாடு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக சி.சிவ சாமி மற்றும்  45 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு  செய்யப்பட்டனர். இதர நிர்வாகிகள் தேர்வு செய்யப்படா மல் இருந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று கோவை ஜீவா இல்லத்தில் நடந்த மாவட்டக் குழு கூட்டத்தில், மாவட்டப் பொருளாளராக மு.வ.கல்யாணசுந்தரம், மாவட்டத் துணைச் செயலாளர்களாக ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல் உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட மாவட்ட நிர்வாகக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி  ஆசிரியர் நலச்சங்க மாநாடு

திருப்பூர், செப்.10- தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு, பல்லடம் ஜெயபிரகாஷ் வீதியில் உள்ள சிஐடியு அலுவலகத் தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபிரகாசம் தலைமை வகித் தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி ராஜகோபால் வாழ்த்திப் பேசினார். இம்மா நாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். 60 வயது முடிந்த அனைவ ருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட, வட்ட கிளை பொறுப்பாளர்கள் உட்பட ஓய்வுபெற்ற பள்ளி,  கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வனவிலங்கு வேட்டை: அபராதம் விதிப்பு

தருமபுரி, செப்.10- மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவருக்கு, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. தருமபுரி, மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம், தாசன்பெயில் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவர் சொக்கன்பட்டி காப்புகாடு பகுதியை ஒட்டி உள்ள  பட்டா நிலத்தில் இருந்த மின் கம்பத்திலிருந்து திருட்டு தனமாக ஒயர் மூலம் மின்சாரம் எடுத்து, மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன் றுள்ளார். அப்போது பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கணேசன் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற போது சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், கணே சன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவ ருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

சாலையில் கம்பீரமாக உலாவிய புலி

நீலகிரி, செப்.10- சிங்கார சாலையில் கம்பீரமாக உலா வந்த புலியை அவ்வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் பீதியுடன் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி, மாயார், சிங்கார உள்ளிட்ட பகுதிகளில் புலிகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ள சாலை ஓரங்களில் உலா வருவதும் சாலையை கடந்து செல்வதும் அதிகரித்துள்ளது. அதே போல் மசினகுடியில் இருந்து சிங்கார செல் லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி சாலையில் கம்பீரமாக நடந்து சென்றது. இதனை அவ்வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். மசின குடி, மாயார், சிங்கார பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன விலங்கின ஆர்வ லர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

சாலை விபத்தில் 2 இளைஞர்கள் காயம்

நாமக்கல், செப்.10- பள்ளிபாளையம் அருகே ஏற்பட்ட சாலை  விபத்தில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியில் காவிரி  ஆற்றங்கரையோரம் தடுப்பணை அமைந் துள்ளது. இந்நிலையில், பள்ளிபாளையத்தி லிருந்து தடுப்பணை பகுதிக்கு செல்வதற் காக ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந் தது. இதனை பின்தொடர்ந்து ஈரோட்டிலி ருந்து கொக்கராயன் பேட்டை செல்வதற் காக இரண்டு இளைஞர்கள், இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்தனர். அப் போது, ஆட்டோ தடுப்பணை பிரிவு வளை வில் திடீரென திரும்பியது. இதனை சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகனத்தில் வேக மாக வந்த இளைஞர்கள் ஆட்டோவின் பின்பகுதியில் மோதினர். இதில் இளை ஞர்கள் இருவரும் காயமடைந்தனர். இவ்வி பத்து குறித்தான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பார்ப் போரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சிறப்பு கல்விக்கடன் முகாம்

ஈரோடு, செப்.10- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு முகாமில், புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கும், ஏற்கனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகிறது. மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி தொடர்வதற்கும், கல்விக் கடன்களை எளிதில் பெறுவதற்கும் இந்த நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள் இதில் பங்கேற்று மாணவர்களின் விண் ணப்பங்களை  உடனடியாக பரிசீலித்து, கல்விக் கடன்களை  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ, மாண வியர் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், பான் கார்டு, சாதிச்சான்று, பெற்றோ ரின் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம்.  கல்வி சான்று, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றி தழ். கலந்தாய்வு கடிதம்/நுழைவுத் தேர்வு முடிவுகள். கல்லூரி ஒப்புதல் கடிதம்/ கல்லூரி சேர்க்கை கடிதம். கல்லூரி கட்டண  விபரம். முதல் பட்டதாரி சான்று மற்றம் உறுதிமொழி சான்று  மாணவ, மாணவிகள் www.pmvidyalaxmi.co.in இணைய தளத்தின் வாயிலாக வங்கிகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதி யான அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்க ளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.