tamilnadu

img

தமிழகத்தில் தொழில் நெருக்கடி: என்ன செய்கிறது அதிமுக அரசு?

கோயம்புத்தூர்:
தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,அதில் தலையிடாமல் தமிழக அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திங்களன்று செய்தியாளர்களை  சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் நலனுக்காக பாஜக அரசு பல சாதனைகள் செய்துவிட்டதாக  100 நாள்சாதனையில் நாடு வளர்ந்துவிட்டது என்றும்அமித்ஷா கூறியிருக்கின்றார். இது உண்மைக்கு மாறானது. தற்போது கடுமையான நெருக்கடியை நாடு சந்தித்து வருகின்றது. 70ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3.50 லட்சம் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மட்டும்60 ஆயிரம் டைமண்ட் தொழிலாளர்கள் வேலை இழந்துளனர்.இந்தியாவில் வேலை இழப்பு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 50 ஆயிரம் சிறுகுறுதொழிற்கூடங்கள் மூடப்பட்டு  5 லட்சம் தொழிலாளர்கள்  வேலை இழந்து இருப்பதாகதொழில் துறை அமைச்சர் சட்டமன்றத்தில்தெரிவித்திருந்தார். நொடிந்த தொழில்களைமீட்க மாநில அரசும் எவ்வித முயற்சியும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளது.கோவை, திருப்பூர்,சேலம், ஈரோடு, சென்னை உட்பட பல்வேறு தொழில் மாவட்டங்கள்  கடும் நெருக்கடியை சந்தித்துவருகிறது. கோவையில் இஞ்சினியரிங், பவுண்டரி, மோட்டார் பம்ப், லேத் உள்ளிட்டதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் மோட்டார் பம்ப்   உற்பத்தியில் ஈடுபடும்பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.  மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். அப்படியென்றால் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து போயுள்ளது என்பதை அரசு உணர வேண்டும். ஆனால் மத்திய அரசுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக பொதுச்செலவினங்களை குறைப்பது, திட்டங்களுக்கான நிதியைவெட்டுவது போன்றவற்றால் நெருக்கடியை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில்தான் தொழில் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க கோவை மாவட்டசிஐடியு,  தொழில் பாதுகாப்பு மாநாட்டினைவரும் செப்.13 அன்று நடத்துகிறது. இதில்கொடிசியா, சீமா, தொழில் வர்த்தக சபைஉள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளனர். 

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவையே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம். சிறு, குறு தொழில்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். ஜாப் ஆர்டருக்கு, முற்றிலும் ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.ஜிஎஸ்டி வரிச்சட்டத்தால் தான்  இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்தும், ஏன் ஜிஎஸ்டி வரி குறைக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம்மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;