tamilnadu

img

காந்தியை மறுபடியும், மறுபடியும் கொல்லாதீர்

கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்

கோவை, பிப். 3–  மதச்சார்பற்ற குடியரசு என்கிற காந்தியின் கனவு 1955லேயே அர சியல் சட்டமாக்கப்பட்டது. திருத்தப் பட்டக் குடியுரிமைச் சட்டத்தை காந்தி ஆதரித்திருப்பார் என்று சொல்வதன் மூலம் காந்தியை மறுபடியும், மறுபடியும் கொல்லா தீர் என ஜி.ராமகிருஷ்ணன் காட்ட மாக தெரிவித்தார். குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை திரும்பப் பெறக்கோரி ஞாயிறன்று கோவையில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில் கையெழுத்து இயக்கம்  நடத் தப்பட்டது. இக்கையெழுத்து இயக் கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து செய்தியாளர் களிடம் பேசுகையில், மத அடிப் படையில் குடியுரிமை வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமா னது. சிஏஏ,  என்பிஆர்,  என்.ஆர்.சி ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.  இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என 14 மாநிலங்கள்  முடிவெடுத்துள்ளது. இச்சட்டத்தை ஆதரித்து வாக்க ளித்த கட்சிகளே மக்களின் எழுச்சி யைக் கண்டு முடிவுகளை மாற்றியுள் ளது. 

அதிமுக எம்.பி.க்கள் இச்சட் டத்தை ஆதரித்து மாநிலங்களவை யில் வாக்களிக்காமல் இருந்திருந் தால் இச்சட்டம் நிறைவேறியிருக் காது. இப்போதாவது தமிழக அரசு இச்சட்டத்திற்கு எதிரான நிலைப் பாட்டை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்தக்கூடாது என் பதை அனைத்து கட்சிகளின் சார் பில் வலியுறுத்துகிறோம். இந்தியக் குடியுரிமை குறித்து 1955லேயே விவாதம் நடத்தி குடிமகன் யார் என்பதை தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது.  ஆனால், தற்போது பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரி மைச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்திய அரசியல் சாச னத்திற்கு எதிரானது. சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத்திற்கு எதிரானது. மதரீதியில் மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டங்கள் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய ஏழை, எளிய, தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரானது. ஒரு குடி மகன் தனது பெற்றோரின் பிறந்த தேதியை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் குடியுரிமை தொடர்பாக முறையான பதில்  அளிக்கவில்லை என்று சந்தேகத் திற்குரிய குடிமகன்கள் என வகைப் படுத்தப்பட்டு, அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள்.  அப்படித் தான் பீகாரை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த குப்தா என்பவர் அசாம் மாநிலத்திற்கு பிழைக்க சென்று முகாமில் அடைக்கப்பட்டு மரண மடைந்துள்ளார்.  ஆகவே  கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்க ளைப் போல இச்சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த மாட் டோம் என அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசு தலை வர், காந்தியின்கனவை நனவாக் கவே இச்சட்டங்களை கொண்டு  வந்ததாகக் கூறியிருக்கிறார். இப் படி சொல்வதன் மூலம் காந்தியை மறுபடியும், மறுபடியும் கொல்லா தீர்கள். மக்களை பிளவுபடுத்தும் இச்சட்டத்திற்கு எதிராக இந்திய மக் கள் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டத் திற்கு எதிராக திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முன்னெ டுக்கும் இந்த கையெழுத்து இயக் கத்திற்கு தமிழக மக்கள் பேராத ரவு தரவேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.