tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க அழைப்பு

உதகை, செப்.14- தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.20 ஆம் தேதியன்று கொண்டா டப்பட உள்ளது. இதற்காக, நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.tnesevai.tn.gov.in இணையதள வழியாக மட்டுமே  விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள  அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப் பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய லாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தை யும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரம மில்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை  தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

கூட்டு பட்டாவில் பெயரை நீக்கி முறைகேடு: துணை வட்டாட்சியர், வி.ஏ.ஓ., பணியிடை நீக்கம்

உதகை, செப்.14- கூட்டு பட்டாவில் பெயரை நீக்கி முறை கேட்டில் ஈடுபட்டதாக துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து  உத்தரவிட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பணியாற்றி வந்த பரமேஸ்வரி, கடந்த  சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் வட்டாட் சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சிய ராக பணியாற்றினார். அப்போது, அதிகரட்டி பகுதியில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான இடம் கூட்டுப்பட்டாவில் இருந்தது. அதில் சில குறிப்பிட்ட நபர்களின் பெயரை நீக்கி விட்டு, தனது பெயருக்கு பட்டா மாற்ற வலி யுறுத்தி அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். இந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தாமல் துணை வட்டாட்சியர் பரமேஸ் வரி, குறிப்பிட்ட நபருக்கு பட்டா மாற்றம் செய்து மற்றவர்களின் பெயர்களை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. பட்டாவில் பெயர்  நீக்கம் செய்யப்பட்டவர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அளித்தனர். இதையடுத்து லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், குன்னூர்  உதவி ஆட்சியர் சங்கீதா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், விதி  மீறி பட்டா மாற்றம் செய்யப்பட்டது உறுதி  செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை  வட்டாட்சியர் பரமேஸ்வரி மற்றும் அதிகரட்டி  கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரை யும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகை யில் அரசு அதிகாரிகள் யாரும் இதுபோன்ற விதி மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது என் றும், மீறும் பட்சத்தில் தகுந்த நபர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித் துள்ளார்.