tamilnadu

img

கூண்டில் சிக்கிய கரடி விடுவிப்பு

கூண்டில் சிக்கிய கரடி விடுவிப்பு

கூண்டில் சிக்கிய கரடி விடுவிப்பு உதகை, ஆக.6- உதகை நகரில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.  நீலகிரியில் வனவிலங்கு கள் எண்ணிக்கை அதிக ரித்து வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஊருக்குள் வரும் வனவிலங்குகள் இங்குள்ள உணவுகளை சாப்பிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்குள் ளேயே தங்கி விடுகின்றன. இதனால் பல நேரங்களில் மனித -  விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு உதகை நக ருக்குள் ஒரு கரடி புகுந்தது.  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விடுதிகளுக்குள் கரடி சுற்றி திரிந்தது. இது பொது மக்களை  அச்சமடைய செய்தது. இந்நிலையில் கரடியை கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உதகை வடக்கு வனச்சரகர் ராம்பிர காஷ் தலைமையிலான வனத்துறை குழுவினர் கரடியை பிடிக்க செவ்வாயன்று ஆரம்பி பகுதிக்கு அருகில் உள்ள உதகை கிளப் அருகே கூண்டு வைத்தனர். மேலும் கரடியை  மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக்குழுவினர் தயாராக  இருந்தனர். இந்நிலையில் கூண்டு வைத்த சில மணி நேரத்தில்  அந்த கூண்டில் கரடி சிக்கியது. அந்த கரடியை உடனடியாக வனத்துறையினர், முதுமலையில் உள்ள அடர்ந்த வனப்பகு திக்குள் விடுவித்தனர்.