பிஎஸ்என்எல் வெள்ளி விழா: இருசக்கர வாகனப் பேரணி
திருப்பூர், அக்.16- பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு கள் நிறைவடைந்ததை யொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகி றது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலுவலர் கள், ஊழியர்கள், ஓய்வூதி யர்கள் உள்ளிட்டோர் பங் கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. மக்களிடையே பிஎஸ்என்எல் தயாரிப்பு கள் மற்றும் அதன் சேவைகள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிஎஸ் என்எல் ஊழியர்களின் இருசக்கர வாகனப் பேரணி புதனன்று நடைபெற்றது. இப்பேரணி மெயின் தொலைபேசி நிலையம் முன்பு தொடங்கி பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மெயின் தொலை பேசி நிலையத்தில் நிறைவடைந்தது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் ‘தற்சார்பு பாரதம்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.37ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவ தும் 97ஆயிரம் 4ஜி மொபைல் டவர்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு கருவிகளு டன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலைபேசி வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில் மிக எளிதாக மொபைல் மற்றும் இணையதள வசதிகள் பெற முடியும். இந்த கோபுரங்கள் சூரிய சக்தி, ஜெனரேட்டர் மற் றும் மின்சாரத்தில் இயங்கி குக்கிராமங்க ளில் வசிக்கும் மக்களுக்கும் தடையில்லாத இணைப்பு வழங்க வழிவகை செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தரைவழி தாமிர கேபிள்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, மாவட் டம் முழுவதும் எங்கெல்லாம் கண்ணாடி இழை கேபிள்கள் வசதி செய்யப்பட் டுள்ளதோ, அங்கெல்லாம் கேட்டவுடன் அதி வேக இண்டர்நெட் வசதியுடன் எப்.டி.டி.எச் தொலைபேசி இணைப்புக் கொடுக்கும் வகை யில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகி றது. இத்துடன் தீபாவளி சிறப்பு சலுகையாக புதனன்று முதல் நவ.15 ஆம் தேதி வரை ரூ.1க்கு சிம் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 30 நாட்கள் மதிப்புள்ள வரம்பற்ற அழைப்புகள், தின மும் 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள் ஆகிய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொது மக்கள் பிஎஸ்என்எல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அந்நிறு வனத்தின் கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் காவேட்டிரங்கன் கேட்டுக் கொண் டுள்ளார்.
