ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை, ஆக.26- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக் கப்பட்ட நிலையில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வா யன்று காலை 7.40 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் மூலம் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு கருப்பு பெட்டியில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2.45 -க்குள் அனைவரை யும் வெளியேற்றிக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந் தது. மேலும் அந்த மின்னஞ்சலில் “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான்.... போவான்... ஐயோ என்று போவான் !” என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டப் பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியு டன் அலுவலகம் முழுமையாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு பொருட்கள் ஏதும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. ஏற்கனவே இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற் பட்டது. இச்சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.