tamilnadu

img

பாஜக நிர்வாகி மீது பணமோசடி புகார் தொண்டர் தற்கொலை முயற்சி

பாஜக நிர்வாகி மீது பணமோசடி புகார் தொண்டர் தற்கொலை முயற்சி

கோவை, அக்.15- பாஜக நிர்வாகி மீது பண மோசடி புகார் தெரிவித்து, பாஜக தொண்டர் ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே தீக்குளிக்க முயற் சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. அன்னூர் அடுத்த பயனூர் பகுதியைச் சேர்ந்த பாஜக வடக்கு மண்டல மகளிர்  அணித் தலைவர் பிரபாவதி ஓர் அறக்கட் டளை தொடங்கப் போவதாகவும், அதற்குப்  பணம் தேவை என்று கூறி, அதேபகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோரை பிர பாவதி அணுகியுள்ளார். சில மாதங்களில் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்து, ரூ.10 லட்சத்தை வாங்கியுள்ள தாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்து ஓராண்டுக்கும் மேலாகியும் பிரபாவதி பணத் தை திருப்பித் தரவில்லை என்றும், பிரபா வதி கொடுத்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, பிரபாவதி மீது பண மோசடி செய்ததாகக் கூறி பிரகாஷ் மற்றும் திவ்யா ஆகியோர் வழக்கறிஞர் மூலம் நோட் டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நி லையில், பிரபாவதி தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பிரகாஷ் மற்றும் திவ்யா ஆகியோர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தி ருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அன்னூர் போலீசார் அழைப்பாணை  அனுப்பியிருந்தனர். விசாரணைக்காக  காவல் நிலையம் வந்த பிரகாஷ், மன அழுத் தத்தில் இருந்ததால், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன் றார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரைக் காப் பாற்றினர். தொடர்ந்து, பிரகாஷிடம் விசா ரணை நடத்திய போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவு றுத்தி அவரை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அன்னூர் காவல் நிலைய வளா கத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவி யது.