tamilnadu

img

பவானி ஆறு திருவிழா

பவானி ஆறு திருவிழா

மேட்டுப்பாளையம், செப்.28- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்  மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு திருவிழா சனி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பறை இசை மூல மாக மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்  மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு திருவிழா கோவை  வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா பாய்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், சுற்றுச் சூழல் துறை பொறியாளர் மோகன ஜெயவள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  பவானி ஆறு திருவிழாவை ஒட்டி மேட்டுப்பாளை யம் – உதகை சாலையில் ஓடந்துறை சந்திப்பு பகுதியில்  தனியார் பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அங் கிருந்து “பவானி ஆற்றை காப்போம் - ஆற்று நீர் மாசு படுவதை தடுப்போம்” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றனர்.  இந்நிகழ்ச்சியில் நிகர் பறை இசை குழு மூலமாக  தன்னார்வலர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகை யிலான பாடல்களை பாடி பள்ளி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர். இதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் பள்ளி  மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.