tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை

தருமபுரி, செப்.14- நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவி களில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை  விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி அணை,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற் றில் விநாடிக்கு 18,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து  18,000 கனஅடியாக நீடித்து வருவதால், ஒகேனக்கல்  அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் சனியன்று தடை விதித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக பிர தான அருவிக்கு செல்லும் நுழைவாயிலை பூட்டி, போலீ சார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் நாளை மின்தடை

திருப்பூர், செப்.14- திருப்பூரில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சி பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வா யன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறவுள்ளது. இதனால் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா  துணை மின் நிலையத்திற்குட்பட்ட பச்சாம்பாளை யம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயி பாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப் பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப் பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம் பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர்,  வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ. அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ மற்றும் வஞ்சிபாளையம் துணை மின் நிலை யத்திற்குட்பட்ட வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம் மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளை யம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலைய பாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம் புதூர், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமுஎகச திருச்செங்கோடு நகர மாநாடு

நாமக்கல், செப்.14- தமுஎகச-வின் திருச்செங்கோடு நகரக்கிளை மாநாட்டில்  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரக்கிளை மாநாடு ஞாயிறன்று பேராசிரியர் ஜெகதீஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது. முருகவேல் வரவேற்றார். சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் எஸ்.சேகரன் துவக்கவுரையாற்றினார். செயலாளர் நித்தியானந்தன் அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. ஆதிநாராயணன், வாலிபர் சங்க முன்னாள் தாலுகா தலைவர்  சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து, சங்கத்தின் நகரக்கிளை தலைவராக எம்.நித்தி யானந்தன், துணைத்தலைவராக ஜெகதீஸ்வரன், செயலாள ராக ஜெ.திவாகர், துணைச்செயலாளராக வியன்பிரதீப், பொருளாளராக முருகவேல் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ஜி.கோபி நிறைவுரை யாற்றினார். முடிவில், க.திவாகர் நன்றி கூறினார்.

செப்.16 இல் துணை முதல்வர் சேலம் வருகை

சேலம், செப்.14- அரசு விழாவில் பங்கேற்பதற்காக, செப்.16 ஆம் தேதி  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு  வருகை தரவுள்ளார். சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி  வளாகத்தில் செப்.16 ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாவின்  பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், இதற்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோச னைக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தலைமையில், ஆட்சியர் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதன்பின் அரசு பொறியி யல் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில், மாநகர காவல்  ஆணையர் அனில் குமார் கிரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  நே.பொன்மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக்யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.