யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வி
கோவை, செப்.17- கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த “ரோலக்ஸ் காட்டு யானை” வனத்துறையினர் மற்றும் கால் நடை மருத்துவர்கள் இரண்டு மயக்க ஊசி செலுத்த முயன்றும், அதிலிருந்து தப்பித்து வனப் பகுதிக்குள் ஓடியது. கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் விவசாய விளைப் பொருட் களை சேதப்படுத்தி வரும் “ரோலக்ஸ் காட்டு யானை” மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள னர். இதற்காக மூன்று கும்கி யானைகள் வர வழைக்கப்பட்டு, 50 பேர் கொண்ட வனத் துறை ஊழியர்கள் குழுக்களாக பிரிக்கப் பட்டு யானையை பிடிக்கும் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செவ் வாயன்று இரவு கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் மற்றும் கால் நடை மருத்துவர்கள் இரண்டு மயக்க ஊசி செலுத்த முயன்றனர். அதிலிருந்து தப்பித்த “ரோலக்ஸ் காட்டு யானை” வனப் பகுதிக்குள் ஓடியது. இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை தேடும் பணி யில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, யானை வனத்துறை வாகனத்தை தாக்க முற்பட்டது. இதைய டுத்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்ற போது வழியில் வந்த நாயை எட்டி உதைத்துச் சென் றது. இந்த விடியோ காட்சிகளும் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.