பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுவிற்கு பாராட்டு விழா
கோவை, செப்.29- பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த வரவேற்புக் குழு விற்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 11 ஆவது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த வரவேற்புக் குழுவிற்கு பாராட்டு விழா திங்களன்று கோவை பிர தான தொலைபேசி வளாகத்தில் நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு வரவேற்புக் குழு செயல் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமை வகித் தார். வரவேற்புக் குழு செயலாளர் பி.மாரி முத்து வரவேற்றார். வரவேற்புக் குழு இணைச்செயலாளர் எம்.ஸ்ரீதர சுப்ரமணியன் அறிமுக உரை நிகழ்த்தினார். வரவேற்புக் குழு தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த நிர்வாகிகளுக்கு பய னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய தலைவர் எம்.விஜயகுமார் நிறைவுரையாற்றி னார். பாராட்டு விழா கூட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.குடியரசு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ். மகேஸ்வரன் நன்றி கூறினார்.
