கந்து வட்டி கும்பல் அராஜகம்
திருப்பூர், ஆக.16- திருப்பூரில் கடன் பெற்ற வர்களின் வீட்டை முறை கேடாக பத்திரபதிவு செய்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், கந்து வட்டி கும்பல் வீட்டை இடித்து சூறையாடினர். திருப்பூர் வெள்ளியங் காடு பகுதியைச் சேர்ந்த மகாமணி (58), மனைவி சாந்தி (52). இவர்கள் 2020 ஆம் ஆண்டு பழனிச்சாமி என்பவரிடம் வட்டிக்கு ரூ.13 லட்சம் கடன் பெற்றுள்ளனர். மாதம் ரூ.22 ஆயிரம் வட்டி செலுத்தி வந்த நிலையில், கொரோனா சமயத்தில் வட்டி தர முடியவில்லை. இந்நிலையில், பணம் பெற்ற தற்கு அத்தாட்சியாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் அட மான கடன் என ஏமாற்றி, நிலத்தை கிரையம் செய்துள் ளனர். கடந்த 6 மாதம் முன்பு வீட்டு வரி செலுத்த சென்ற போது வீடு மணிகண்டன் என்பவர் பெயரில் இருப் பதை அறிந்து அதிர்ச்சியடைந் தனர். இது தொடர்பாக பழ னிச்சாமியிடம் விசாரித்த போது பெற்ற கடனுக்கு மாற் றாக தனது ஆதரவாளர் மணி கண்டன் என்பவரது பெய ருக்கு வீட்டை மாற்றி கிரயம் செய்துள்ளார். இது தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மகாமணி மற்றும் சாந்தியை பழனிச் சாமி தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆக.15 ஆம் தேதி இருதரப் பும் அழைக்கப்பட்ட நிலை யில், சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலை யத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பழனிச்சாமி தரப் பினர் நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பு றத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துள்ளனர். வீட் டின் உள்ளிருந்த மகள் ஜனனி கைக்குழந்தையுடன் வெளியே ஓடி வந்துள்ளார். மேலும், வீட்டினுல் நுழைந்த நபர்கள் பொருட்களை சூறையாடி கழிவறை கதவு களை இடித்து தள்ளியுள்ள னர். இது தொடர்பாக திருப் பூர் தெற்கு காவல் நிலை யத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் அத்துமீறி வீட்டை இடித்து சூறையாடிய பழனிச்சாமி யின் ஆதரவாளர்கள் மணி கண்டன் மற்றும் பாண்டி இருவரை சனியன்று கைது செய்தனர்.