உயிர்களை பறிக்கும் தனியார் ஆலையை மூடிடுக ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சியினர் மனு
உதகை, ஆக.1- தேவாலா பகுதியில் மனித உயிர்களை பறிக்கும் தனி யார் தார் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, அனைத் துக்கட்சியினர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாலம் நகராட் சிக்குட்பட்ட தேவாலா பகுதியில் பிஆர்சிசி என்கிற தார் கலவை ஆலை இயங்கி வருகி றது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகு தியில் செயல்படும் இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால், பொதுமக் கள் மற்றும் குழந்தைகள், புற்றுநோய், சுவா சக் கோளாறுகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதன் விளைவாக, கடந்த திங்களன்று ஆலையின் உள்ளே மலை போல் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்களின் பாரம் தாங்காமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந் ததில், அருகிலிருந்த 9 வீடுகள் பலத்த சேத மடைந்தன. இந்நிலையில், சட்ட விதிகளை மதிக்காம லும், மக்களிள் உயிர்களுக்கும், உடமைக ளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்து இந்த ஆலையின் உரிமை யாளர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், பாது காப்பு வழங்க வேண்டும். எந்தவித சட்ட விதி முறைகளையும் பின்பற்றாமல், கேரளாவிலி ருந்து கொண்டு வரப்பட்டு, மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கற் களை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுச் சுழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு களை ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தர மாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று அனைத்துக்கட்சியினர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு- விடம் மனு அளித்தனர். முன்னதாக, திமுக கூடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிடமணி தலை மையிலும், அதிமுக கூடலூர் சட்டமன்ற உறுப் பினர் பொன் ஜெயசீலன் முன்னிலையிலும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் ஏரியா கமிட்டி செயலாளர் பி.ரமேஷ், வாலி பர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ராசி ரவிக்குமார், நகர்மன்றத் தலைவர் எஸ்.சிவ காமி, பாஜக மாவட்டச் செயலாளர் சிபி, காங் கிரஸ் நகரப் பொருளாளர் ஜோனி, ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் கா.சகாதே வன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பெ.முத்துக் குமார், தாயகம் திரும்பியோர் நலச்சங்க துணை பொதுச்செயலாளர் மு.க.முருகன், தேமுதிக மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.ஏ.குருநாதன், ஐயுஎம்எல் நிர்வாகி அபூ பக்கர், தவெக நகரச் செயலாளர் கற்பக விநா யகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.