பல்லடத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளிக்கூட வாயிலை மறித்து அதிமுக கட் அவுட்
திருப்பூர், செப்.12- பல்லடத்தில் எடப்பாடி பழனிச்சா மியை வரவேற்கும் விதமாக அரசு பள் ளிக்கூட வாயிலை மறித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் பல முறை எச்சரித்து அறிவுறுத்தியும் கூட, ஆபத்தை விளைவிக்கும் வகை யில் இது போல் வைக்கப்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள், பெற்றோர் வேத னையுடன் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சா ரப் பயணம் மேற்கொண்டு வரும் அதி முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிச்சாமி வெள்ளியன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண் டார். அதன் ஒரு பகுதியாக பல்லடம் என். ஜி.ஆர் சாலையில் அவரது பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிச் சாமியை வரவேற்கும் விதமாக பல்ல டம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் பேனர்கள், கொடிகள் கட்டியிருந்தனர். இதில் என்.ஜி.ஆர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கூடத் தின் வாயிலை மறித்து, கட்அவுட் வைக் கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் கட் அவுட்கள் வைக்கப் பட்டுள்ளன. இதனால் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர். பள்ளிக்கூட வாயிலை மறித்து அதிமுக வினரால் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட் கள் பெற்றோர் மத்தியில் பெரும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், பள்ளியின் முன்பு 50 அடிக் கும் மேல் உள்ள கட்அவுட்களை வைத் துள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் கட்அவுட் விழுந்து மரணம் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உயர்நீதி மன்றமும் கட்அவுட் வைப்பதற்கு கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்நி லையில் இப்படி கட் அவுட் வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை. இருப்பினும் இப்படி சட்டத்திற்கு விரோதமாக பள்ளி வாயிலை மறித்து கட்அவுட் வைத்துள் ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந் தால் யார் பொறுப்பு ஏற்பார்கள்? உடன டியாக கட் அவுட் வைத்தவர்கள் மீதும், இதற்கு அனுமதி அளித்தவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோல கட் அவுட் வைப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என வேதனையுடன் தெரிவித்தனர்.