tamilnadu

img

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்'

ஈரோடு, ஏப்.22- ஊதிய நிலுவையை வழங்கக் கோரி அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் போராட்டம் நடை பெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப் படி கிராமப்புற விவசாயத்  தொழிலாளர்க ளுக்கு ஒன்றிய பாஜக அரசு கடந்த 5 மாதங்க ளாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாக்கி யில்லாமல் உடனே ஊதியம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், நசிய னூர் வங்கி முன்பு கோரி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். சங்கத்தின் ஈரோடு தாலுகா தலைவர் கே.முருகன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மாவட் டச் செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி வாழ்த்தி பேசினார். இதேபோல், மொடக் குறிச்சியில் தாலுகா தலைவர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராக வன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகே சன், தாலுகா செயலாளர் எம்.சசி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  கவுந்தப்பாடி நால்ரோடு தபால் நிலை யம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுக்கா தலைவர் ஜானகி மற் றும் தம்பி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி, மாவட் டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி வாழ்த்திப் பேசினார். காலிங்கராயன் பாளையத்திலும் இதேபோன்று போராட்டம் நடைபெற்றது.