இரண்டு வருட நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு, மாணவனுக்கு கிடைத்த அசல் பள்ளிச் சான்றிதழ்
ஈரோடு, செப்.27- தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் படித்த மாணவனுக்கு, 10ஆம் வகுப்பு அசல் சான்றிதழ் இரண்டு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ஈரோடு நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்பட்டது. ஈரோடு மாவட்டம், காமராஜ் நகரை சேர்ந்த ஜே.தேவி என்பவரின் மகன் ஜெ.ஜெயசூர்யா. இவர் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் பாடப்பிரிவில் சேர்ந் தார். கல்லூரி சேர்க்கையின் போது கல்வி கட்டணம் மற்றும் 10ஆம் வகுப்பு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றி தழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்தி டம் வழங்கினார். தொடர்ந்து கல்லூ ரிக்கு இரண்டு வாரம் மட்டுமே சென்று வந்தார். அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக அதிக கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை பாதி யில் நிறுத்தினார். தனது அசல் சான்றி தழ்களை திரும்ப கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளுமாறு தெரிவித்தது. இதைய டுத்து அசல் கல்வி சான்றிதழ்களை பெற்று தரக்கோரி ஈரோடு மக்கள் நீதி மன்றத்தில் ஜே.தேவி என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்று கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி வி.பி.சுகந்தி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினார். இதில் கல்லூரி முதல்வர், ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் கல்வி கட்டணம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மீதி கல் வித்தொகையை செலுத்தாமல் கல்லூ ரிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்தினார். மீதி கல்வி கட்டணத் தொகையை செலுத்தி அசல் சான்றி தழ்களை பெற்றுக் கொள்ளும்படி தெரி வித்தார். இருதரப்பினருக்ம் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. அதன்படி ஜெ.ஜெய சூர்யாவின் 10ஆம் வகுப்பு அசல் கல்வி சான்றிதழை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி வழங்கினார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலர் சு.ஸ்ரீவித்யா மற்றும் நிரந்த மக்கள் நீதி மன்ற ஊழியர், சமரச மன்ற ஊழி யர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் ஊழியர்கள் உடனிருந்தனர். இதுகுறித்த செய்திக்குறிப்பில் மேலும், நீதிமன்ற கட்டணம் கிடையாது. அதே சமயம் இங்கு வழங்கபடும் தீர்ப்பே இறுதியானது. மேல்முறையீடு கிடை யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.