உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சைகளை அனைவரும் கற்றுக்கொள்ள அறிவுறுத்தல்
திருப்பூர், செப்.13- தனிநபர் ஒவ்வொருவரும் இரத்தப் போக்கை நிறுத்துதல், சி.பி.ஆர் உள்ளிட்ட உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் உலக முதலுதவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி னார். உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பாக அவிநாசி சாலை, குமார் நகரில் உள்ள தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு சனியன்று நடைபெற் றது. இதில், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் பேசுகையில், உயிர்களை காப்பாற்றுவதில் முதலுதவியின் முக்கிய பங்கு மற்றும் அதனை அவசர காலங்களில் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம். முதலுதவி என்பது உடனடி மருத்துவ உதவியாகும், இது காயங்களை மோசமடையாமல் பாதுகாக்கவும், சிக்கல் களை தடுக்கவும், உயிரைக் காக்கவும் பயன் படுகிறது. தனிநபர் ஒவ்வொருவரும் இரத்தப் போக்கை நிறுத்துதல், சி.பி.ஆர் உள்ளிட்ட உயிர் காக்கும் முதலுதவிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து தீயணைப்பு பணியா ளர்கள் இதில் பங்கேற்ற மாணவ, மாணவிக ளுக்கு எளிய முதலுதவி பயிற்சிகள், உபகர ணங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றை குறித்து பயிற்சி அளித்தனர்.
