விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர், அக். 17 - திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் நடுநி லைப்பள்ளி இன்டிராக்ட் கிளப் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பட்டி மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி இன்டிராக்ட் கிளப் தலைவர் ஃபஹீமா பர்வீன் தலைமை தாங்கினார். செயலாளர் கனிஷ்கா வரவேற் றார். மற்றொரு செயலாளர் அனுஸ்ரீ இன்ட்ராக்ட் கிளப் குறித்து பேசினார். பொருளாளர் பரமேஸ்வரி தீ தடுப்பு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சி குறித்து விளக்கிப் பேசினார். பட்டாசு வெடிப்பது குறித்து இன்டிராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாள ரும், ஆங்கில ஆசிரியையுமான லலிதா விளக்கி பேசினார். தொடர்ந்து பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் செயல் விளக்கம் காண்பித்தனர். இதனை தொடர்ந்து தீபாவளியை மேம்படுத்துவது உற வுகளே என்ற தலைப்பில் மாணவிகள் ஹரிப்பிரியா, சினேகா ஆகியோரும், கேளிக்கைகள், இனிப்புகள் பட்டாசுகளே என்ற தலைப்பில் மாணவிகள் ரிஷியா, பிரணிதா ஆகியோர் பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பட்டி மன்ற நடுவராகச் செயல்பட்டு தீர்ப்பு வழங்கினார். முடிவில் இன்டிராக்ட் கிளப் துணை தலைவர் இனியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.
