ஹோட்டல் நடத்திய பட்டியலின குடும்பத்திற்கு சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல்
திருப்பூர், ஆக. 25 – பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் கிராமத் தில் ஹோட்டல் நடத்திய தலித் குடும்பத்திற்கு இட உரிம ையாளர் சாதியைச் சொல்லி கொலை மிரட்டல் விடுத் ததாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத் தார் புகார் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே முத்தாண்டி பாளையம் விசிபி கார்டனைச் சேர்ந்த கிருபா என்பவர் திங்களன்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: தனது மாமனார், முத்தாண்டிபாளையம் பகுதி யில் உள்ள துரைசாமி என்பவருக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தி வந் தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த ஹோட் டலை நடத்த முடியாத நிலையில், அதே கடையில் வேலை செய்து வந்த மகேஸ்வரிக்கு, அந்த ஹோட்ட லில் உள்ள எங்கள் பொருட்களை பயன்படுத்திக் கொள் வதற்கு தினமும் ரூ.700 வாடகை தர வேண்டும் என பேசி ஒப்படைத்தோம். உரிமையாளரும் இதை ஒப்புக் கொண்டார். அதன்படி ஏழு மாதங்கள் தொடர்ந்து எந்த பிரச்சனை யும் இல்லாமல் வாடகை கொடுத்து வந்தார். ஆனால் பிறகு ஹோட்டலை சரியாக நடத்தாததால், நாங்கள் எங்கள் பொருட்களை காலி செய்து, ஹோட்டலையும் காலி செய்கிறோம், எங்கள் முன்பணத்தை திருப்பித் தரும்படி உரிமையாளர் துரைசாமியிடம் கேட்டபோது மகேஸ்வரிக்கு இழப்பீடாக ரூ.1லட்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது மிரட்டலுக்கு பயந்து ரூ.65ஆயிரம் கொடுத்துவிட்டோம். எனினும் பல்லடம் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் துரைசாமி, தனது அரசியல் செல் வாக்கைச் சொல்லி எங்களுக்கு மிரட்டல் விடுத்து வரு கிறார். அவரது இடத்தில் போடப்பட்டுள்ள ஹோட்டல் செட்டை பிரிக்க விடாமல், எங்கள் பொருட்களை எடுத் தால், குடும்பத்தைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் கிருபா கூறினார். இது பற்றி அவரது குடும்பத்தாரிடம் கேட்டபோது, துரைசாமி பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்று சொல்லி மிரட்டுவதாகக் கூறினர். இந்த பிரச்சனையில் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் துரைசாமி தரப்பினருக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச அழைக் கின்றனர் என்றும் தெரிவித்தனர். எனவே தங்கள் சாதி யைச் சொல்லி இழிவுபடுத்துவதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் துரைசாமி மீது எஸ்.சி., எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் முறை யிட்டனர். இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்ப தாக பதிலளித்ததாகவும் கிருபா கூறினார்.