தியாகி பூசாரியின் 70 ஆம் ஆண்டு நினைவேந்தல்
கோவை, ஜூலை 20- பஞ்சாலை முதலாளிக ளின் குண்டர்களால் படு கொலை செய்யப்பட்ட தியாகி பூசாரியின் 70 ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. கோவையில் செயல்பட்டு வந்த விஜயலட்சுமி மில் லில் பணிபுரிந்து, தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக, பஞ்சாலை முதலாளிகளின் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி பூசாரி-யின் 70 ஆம் நினைவு தினம் ஞாயிறன்று செல் வபுரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு நகரச் செயலா ளர் பி.சி.முருகன் தலைமையில், செல்வபுரம் வடக்கு டிவிசனிலுள்ள தியாகி பூசாரி நினைவு பதிப்பகத்திலிருந்து பேரணியாக சென்று, அவ ரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற நிகழ்வில், கட்சிக்கொடி யினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராம மூர்த்தி ஏற்றி வைத்தார். தோழர் பூசாரி நினைவு கல்வெட்டை அவருடைய மகன் சந்திரசேகர் திறந்து வைத்தார். இதன்பின் அப்பகுதியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேரூர் நகரக்குழு உறுப் பினர் சேட்டு (எ) பாலசுப்ரமணியம் வரவேற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐ டியு பஞ்சாலை சங்க நிர்வாகி சி.பிரான்சிஸ் சேவி யர் ஆகியோர் உரையாற்றினர். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆர்.முருகே சன், என்.ஆறுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.கே.முத்துக்குமார், எஸ்.மலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற் றது.