திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் மறியல் ஏழு நகரங்களில் 2 ஆயிரத்து 500 பேர் கைது
திருப்பூர், ஜூலை 9 – மோடி அரசின் நாசகரக் கொள்கைக ளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங் கள் திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங் களில் நடத்திய மறியல் போராட்டத்தில் சுமார் 1300 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 500 பேர் கைதானார்கள். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும், விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமூகப் பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மா வட்டத்தில் ஏழு ஊர்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் திருப்பூரில் தியாகி குமரன் நினைவ கம் முன்பு மத்திய தொழிற்சங்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து மோடி அரசின் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி ரயில் நிலையம் எதிரில் தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். தபால் நிலைய நுழைவாயில் பகுதி யில் அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலை சந்திப்பில் அனைவரும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி செயலாளர் என்.சேகர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். சிஐடியு மாவட் டத் தலைவர் ஜி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், எல்பி எப் நிர்வாகி ரங்கசாமி, ஐஎன்டியுசி நிர் வாகி வி.ஆர்.ஈஸ்வரன், எச்எம்எஸ் செய லாளர் ஆர்.முத்துசாமி, எம்.எல்.எப். சக் திவேல், ஏஐசிசிடியு நிர்வாகி முத்து, யுடி யுசி சதீஷ்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற் றனர். மறியலில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 620 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர். உடுமலைபேட்டை உடுமலைப்பேட்டையில் எல்ஐசி அலுகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடைபெற்றது. பின்னர் பொள் ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுச்சா லையில் எல்பிஎப் தொழிற்சங்க தலை வர் நாகமாணிக்கம் தலைமையில் மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகரச் செயலாளர் சி.வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரச் செயலாளர் தண்டபாணி, சிஐ டியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெக தீசன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர்கள் விஸ்வநாதன், ஜோசப், வெண் ்ணிலா, ஜெகானந்தா, ரத்தினசாமி, பஞ் சாலை சங்க நிர்வாகி செல்வராஜ், ஜெய பிரகாஷ், அங்கன்வாடி சங்கத்தின் சித்ரா, ஆட்டோ சங்கத்தின் ஜஹாங்கீர், இப்ராகீம், பார்த்திபன், போக்குவரத்து சங்கத்தின் கார்த்திகேயன் மற்றும் ஏஐ டியுசி செளந்திராஜன், எம்.எல்.எப் சங் கத்தின் ஈஸ்வரன் உள்ளிட்ட திரளனோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண் டனர். இம்மறியலில் பங்கேற்ற 295 பெண்கள் உள்பட 350 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தாராபுரம் தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட கைத்தறி நெச வாளர் சங்கச் செயலாளர் என்.கனக ராஜ் தலைமை வகித்தார். இதில் 272 பெண்கள் உட்பட மொத்தம் 352 பேர் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலுகா குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்டராமன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.கே.துரை சாமி, ஏஐடியுசி செயலாளர் ஜி.ரவி, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசி னர். மறியலில் ஈடுபட்ட 352 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பல்லடம் பல்லடத்தில் பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் முன்பு தொழிற்சங்க இயக்கத்தினர் அணி திரண்டனர். எம்எல்எப் சங்கச் செயலா ளர் ராஜ்குமார் தலைமையில் சிஐடியு சார்பில் ஆர்.பரமசிவம், ஏஐடியுசி சார் பில் மூர்த்தி, ஐஎன்டியுசி சார்பில் முருக தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் பேருந்து நிலையம் முன்பாக கோவை – திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட பெண்கள் சுமார் 170 பேர் உள்பட மொத்தம் 270 பேரை காவல் துறையி னர் கைது செய்தனர். காங்கேயம் காங்கேயத்தில் பேருந்து நிலை யம் முன்பாக சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் செல்வராஜ் தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் எம். கணேசன், சிஐடியு மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.காளிராஜ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலை வர் ஆர்.சித்ரா, மின்வாரிய கோட்டச் செயலாளர் டி.கார்த்திகேயன் மற்றும் எல்பிஎப் மண்டலத் தலைவர் சென்னி யப்பன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பேருந்து நிலையம் முன்பாக ஊர்வலமாக புறப்பட்டவர் களை காவல் துறையினர் தடுத்தனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் பங்கேற்ற பெண்கள் 161 பேர் உள்பட 231 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவிநாசி அவிநாசியில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி தலைமையில் தபால் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் சாலையின் இருபு றமும் மறியல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி சிவக்குமார் தலை மையில் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இப்போராட்டத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் ராஜன், கட் டுமான சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, கனகராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் பழ னிச்சாமி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, ஏஐடி யுசி சண்முகம், ஷாஜகான், கோபால், முத்துசாமி, எல்பிஎஃப் மனோகரன், எம் எல்எப் முருகேசன், அங்கன்வாடி ஊழி யர்கள் உள்பட 312 பேர் கைதானார் கள். ஊத்துக்குளி ஊத்துக்குளி ஆர்.எஸ். பஸ் நிறுத் தம் முன்பிருந்து ஊர்வலம் புறப்பட்டு கனரா வங்கி முன்பாக சாலை மறியல் நடைபெற்றது. இதில் சிஐடியு இன்ஜினி யரிங் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. கந்தசாமி தலைமை ஏற்றார். சிஐடியு நிர்வாகிகள் பழனிச்சாமி, சந்திரமூர்த்தி, பெரியசாமி, காமராஜ், மணியன், ஏஐடி யுசி நிர்வாகிகள் வி.பி.பழனிசாமி, ஐஎன் டியுசி மனோஜ், எல்பிஎப் ரமேஷ்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, இந்திய கம்யூ னிஸ்ட் தாலுகா செயலாளர் வி.ஏ.சரவ ணன், மனிதநேய ஜனநாயகக் கட்சி சாகுல் அமீது உள்பட மொத்தம் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.