‘பாஜக அரசிற்கெதிராக அமைதிப் பேரணி’
கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளை கைது செய்த சத்தீஸ்கர் மாநில பாஜக அரசிற்கெதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை பந்தயசாலை பகுதியில் சனியன்று அமைதிப் பேரணி மற்றும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜெ.அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.