மதுக்கூர் இராமலிங்கம் பேச்சு
உடுமலை, செப். 29- தமிழ்நாட்டில் தமிழக இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலுகா குழு சார்பில் சனி யன்று கணியூர் பேருந்து நிலை யம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழ் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த கணியூர் பகுதி பல சுயமரியாதை மற்றும் பொதுவுடைமை தலைவர்களை உருவாக்கிய மண். இந்த இடத் தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகளைப் பற்றியும், காஷ்மீருக்கான சட்ட பிரிவு 370 நீக்கம் குறித்தும் பேசக் கூடாது என்று காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை ஏற் றுக்கொண்டால் தான் அனுமதி தருவோம் என்றது.
காவல்துறைக்கு நாங்கள் சொல்வது, நாடு சுதந்திரம் பெறு வதற்கு நடைபெற்ற போராட்டங் களில் கலந்து கொண்ட எங்க ளது தோழர்களின் உயிர் தியாகத் தால் பெற்ற சுதந்திரத்தை காப் பாற்றுவது பற்றி எங்களுக்கு நீங்கள் பாடம் கற்றுதர வேண்டி யது இல்லை. மேலும் மக்களின் நலனுக்கு பாடுபட வேண்டிய காவல்துறையை ஆளும் கட்சிகள் தங்களின் சுய நலனுக்கு பயன்ப டுத்துகிறது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்காத காவல்துறையி னர், நாங்கள் ஆட்சி செய்யும் மாநி லங்களில் காவல்துறையின் நலனை பாதுகாப்பாக வைத்துள் ளதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். மத்திய பாஜக அரசு காஷ்மீர் மாநிலத்தில் நடத்திவரும் அடக்கு முறையை சட்ட ரீதியாக உடைத்து முதலில் சென்ற அரசியல் தலை வர் சிபிஎம் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தான். எனவே இந்த நாட்டின் சட்டத்தை பாது காக்க எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை.
மத்திய மோடி அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை, ஒரே மொழி என்று சொல்லிக் கொண்டு இருப்பது நம்மை மீண்டும் பின் நோக்கி கொண்டு செல்லத் தான். ஆனால் அவர்களை “நாம் எல் லோரும் ஒரே சாதி என்றோ, அனைத்து மக்களுக்கும் ஒரே சுடுகாடு என்றோ” சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம், அவர்களால் முடியாது. இதனால் தான் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை, பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தரு வது, இவற்றை மக்களும், மாண வர்களும் எதிர்க்கக் கூடாது என் பதற்காக தான் கடந்த வாரம் பொறியியல் கல்லூரியில் பக வத்கீதையை பாடத்தில் இணைப் பது என்கின்றனர். படித்த மாண வர்கள் போராட்டம் செய்யாமல் கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே என்கின்றனர். தங்க ளுடைய மேலாதிக்க தனத்தை தொடர்ந்து கொண்டு செல்லவும், தங்கள் அரசியலுக்காக மதத்தை யும் பயன்படுத்துகின்றனர். மேலும் நாட்டின் மின்சா ரத்தை அதானிக்கும், உணவு பொருள்கள் பதஞ்சலி நிறுவனத் தின் ராம்தேவுக்கும், இதர துறை களை அம்பானிக்கு தாரைவார்த்து உள்ளது மத்திய அரசு. இது போன்ற பாஜக அரசின் நடவடிக் கைகளை எதிர்க்க வேண்டிய எடப்பாடி கே.பழனிசாமி தலை மையிலான மாநில அரசு, தன்னு டைய பதவியை காப்பாற்ற மத்திய அரசிடம் நமது உரிமை களை விட்டுக் கொடுத்து வரு கிறது. இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட ரீதியாகவும், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று பேசினார். இந்த பொது கூட்டத்தில் சிபிஎம் திருப்பூர் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன், தாலுகா செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.