tamilnadu

img

உலக மகளிர் தின விழா கருத்தரங்கம்

குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப.செல்விலைமை தாங்கினார். யாழ் கலை பண்பாட்டு மையத்தின் பொறுப்பாளர் முனைவர் கிருஷ்ணபாரதி துவக்கி வைத்து பேசினார். சங்கமம் ஒருங்கிணைப்பாளர பி.வில்வம் வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து உலக மகளிர் தினவரலாறு குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காந்திஜெயந்தி உரையாற்றினார்.  மேலும், ‘ புயலெனப் புறப்படுவோம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவி இரா.அன்புமதி மகளிர் தின கவிதை வாசித்தார். மகளிர் தலைமைக் காவலரும், பெண்கள் சமூக விழிப்புணர்வு ஆலோசகருமான செல்வி கவிதா ,  பெண்கள் நவீன மின்னணு சாதனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் , பெண்கள் தற்காப்பிறகான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். முன்னதாக, முனைவர் சுப.செல்வி எழுதிய ‘ வணக்கம்’ என்ற நூலை அறிமுகம்செய்து பேசினர். இந்நிகழ்வில் சி.இர.நிலா, மகேஸ்வரி ராஜேந்திரன், சித்தாரா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;