tamilnadu

img

எங்களது உயிரைக் காக்குமா அரசு பழங்குடி மக்கள் வேதனை

கோவை, ஜூலை 22- என்னேரமும் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப டுத்துகிற தொகுப்பு வீடு களை ஆய்வு செய்து தர மான வீடுகளைக் கட்டித் தர வேண்டுமென புளியங் கண்டி பழங்குடியின மக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியங்கண்டி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின் றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வனத்து றையினரால் தொகுப்பு வீடுகள் கட் டித்தரப்பட்டன. இதில், இரண்டு, மூன்று குடும்பங்கள் என ஓரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இதற்கிடையே, இந்தத் தொகுப்பு வீடுகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பழுத டைந்து மேற்கூரைகள் அனைத்தும் பெயர்ந்து வெறும் கம்பிகளுடன் வானம் பார்த்த கூரைகளாக இருந்து வருகிறது. இருக்கும் மேற் கூரையின் கான்கிரீட் கலவை களும் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து குழந்தைகள், பெரிய வர்கள், கர்ப்பிணிகள் படுகாய மடைந்து மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துள்ளனர். இதுகுறித்து பல முறை அரசுத் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும், கோரிக்கை மனு அளித்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்விதப் பலனும் இல்லையென மக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். இந்நிலையில், தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால் பழுத டைந்த வீடுகள் எப்போது வேண் டுமானலும் இடிந்து விழும் நிலை யில் உள்ளது. இதனால் அப்ப குதி மக்கள் வீட்டிற்குள் இருக்க முடியாமல் கொட்டுகிற மழையில் குழந்தைகளுடன் விடிய, விடிய கண்விழித்து உயிரை காப்பாற்றிக் கொள்ளும் துயரம் இருந்து வரு கிறது. இந்நிலையில், செவ்வா யன்று இரவு 10 மணியளவில் இக் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ண வேணி, ஆனந்தி ஆகியோரது வீட்டில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் அக்குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.  எனவே, உடனடியாக, தங்களது பகுதியை அரசு உயர் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பார்வையிட வேண்டும். தங்களது குடியிருப்புக ளுக்கு போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பான தரமான குடியிருப்பு களை அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கோ ரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற் குள் அரசு செவி சாய்க்காவிட்டால் அரசுத்துறை அலுவலகங்களுக் குள்ளோ அல்லது தங்களது பூர்வீக நிலமான வனத்திற்குள் சென்றோ குடியேறப் போவதாக அம்மக்கள் தெரிவித்துள்ள்ளனர்.

;