tamilnadu

img

பூர்வீக இடத்திலேயே மாற்று இடம் வழங்கிடுக பழங்குடியின மக்கள் போராட்டம்

பொள்ளாச்சி, ஆக. 16-  பூர்விகமாக தாங்கள் குடியிருந்து வந்த கல்லாறு வன கிராத்திலேயே குடியிருக்க மாற்று  இடம் வழங்கிடக் கோரி பழங்குடியின மக்கள் சனி யன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பபத்திற்குட்பட்ட கல்லாறு வன கிராமத்தில் 100க்கும் மேற் பட்ட பழங்குடியின மக்கள் குடும் பங்களாக வசித்து வந்தனர்.  இந்நி லையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மழைவெள் ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. இத னைத்தொடர்ந்து அவர்கள் வால் பாறை தாய்முடி எஸ்டேட் குடியிருப் புகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நி லையில் தங்களது பூர்விகக் குடியி ருப்புகளுக்கு அருகிலேயே மாற்று இடங்களை வழங்கிடக்கோரி வட் டாட்சியரிடமும், வனத்துறையினரி டமும் பல முறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மே, 1ஆம் தேதியன்று தங்களது கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் மூலமாக அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடமி ருந்து வந்த பதில் கடிதத்தில் வால் பாறை வட்டாட்சியர் கள ஆய்வு செய்த பின்னர் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக எழுதப்பட்டிருந்தாக தெரிவித்தனர்.

ஆனால், இன்றுவரை எவ்வித நட வடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றாஞ்சாட்டி னர். மேலும், பூர்விகமாக தாங்கள் குடியிருந்து வந்த கல்லாறு வன கிராத்திலேயே மாற்று  இடம் வழங்க வேண்டும். வன உரிமை 2006 சட்டத்தின்படி அனுபவ நிலப் பட்டா வழங்க வேண்டும். பழங்குடி யினர் நல்வாழ்வு திட்டத்தின் மூல மாக அனைத்து பங்குடியின குடும் பங்களுக்கும் வீடுகள் கட்டித்தர நட வடிக்கை எடுக்க வேண்டும். குழந் தைகளுக்கு பள்ளி புத்தங்கள் வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாச்சியர் மற்றும் வனத்துறையி னர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இதில், ஒரு வார காலத்திற்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படு வதாக அதிகாரிகள் தெரிவித்த பின் னரே அனைவரும்  கலைந்து சென்ற னர்.