tamilnadu

img

பழங்குடியின மக்களுக்கு இடம் ஒதுக்கி வீடுகள் கட்டித்தருக அனைத்துக்கட்சி கூட்டியக்கம் கோரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 31- கல்லாறுகுடி பழங்குடி யின மக்களுக்கு இடம் ஒதுக்கி வீடுகள் கட்டித்தர வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி அனைத்துக் கட்சி கூட்டி யக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த கல்லாறு குடி செட்டில்மென்ட் பகுதியிலுள்ள பழங்குடியின மக்களின் கோரிக்கையான தெப்பகுளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கி வீடுகள் கட்டித்தர வேண்டுமென ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று பழங்குடியின மக்கள் வனத்திற்குள் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னையடுத்து, வனத்துறை மற்றும் வரு வாய்த் துறையினர் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதியளித்தனர். ஆனால், இன்றுவரை இதுகுறித்து எந்தவித தற்போது வரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை. மேலும், இதுதொடர்பாக  ஆக. 21 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டியக்கத்தினர் சார்பில் வனத்துறை பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட் சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப் பட்டும் எந்தவொரு பயனுமில்லை. எனவே, இக்கோரிக்கையை நிறைவேற்ற வலி யுறுத்தி செப்டம்பர் 3 ஆம் தேதியன்று பொள்ளாச்சி  வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக்  கூட்டியக்கத்தினர் அறைக்கூவல் விடுத்தனர்.

 இந்நிலையில், இப்போராட்ட எதி ரொலியாக (ஆக.31) திங்களன்று பொள் ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  சிவக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், கல்லாறுகுடி பிரச் சனை குறித்து தீர்வு காண காலஅவகாசம் வேண்டுமெனவும், இப்பிரச்சனை குறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்கும், வனத் துறை மாவட்ட அலுவலரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். முன்னதாக, இக்கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம், திமுக கண் ணுச்சாமி, சிபிஐ வட்டார செயலாளர் சுப்ர மணியம், மதிமுக நகர செயலாளர் துரை பாய், தபெதிக வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன், விசிக மாவட்ட செயலா ளர் ச.பிரபு, மஜக பொறுப்பாளர் முஸ்தபா, மமக பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, ஏக்தா பரிசத் ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.