tamilnadu

img

தென்னை மரங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

 விவசாயிகள் கவலை

உடுமலை, ஜன. 31- காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதப்படுத்தப்படுவதால் உடுமலை பகுதி விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். உடுமலை தாலுகாவில் விளை நிலங்களில் தொடர்ந்து காட்டு விலங்குகள் சேதப்படுத்தியும் மற்றும் விவசாயிகளை தாக்கியும் வருகிறது. இதனால் கடுமையான மன உளைச்ச லுக்கு உள்ளாகிவுள்ள விவசாயிகள் கடந்த மாதம் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்திடம் முறையிட்டனர். எனினும் பாதிப்புகள் தொடர்ந்ததால் இழப்புகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது தலையிட்ட மாவட்ட நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.  இந்நிலையில் கடந்த சில வாரங் களாக காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை பகுதி யில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாய்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், கோடை காலம் தொடங்கிய நிலையில் காட்டு பகுதியில்  உள்ள விலங்குகள் விளை நிலங்களுக்கு வர தொடங்கியுள்ளன. உடனடியாக வனத்துறை மலையடிவார பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகழிகள் அமைத்து விலங்குகள் விளை நிலங்க ளுக்கு வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வரை விலங்குகளால் சேதப்படுத்தபட்ட தென்னை மற்றும் விளை பயிர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என்றனர்.

;