tamilnadu

img

தனியாருக்கு 4ஜி சேவை தரும் மத்திய அரசு பிஎஸ்என்எல்லுக்கு தர மறுப்பது ஏன்?

 கோவை, ஜூலை 16 –  தனியாருக்கு 4ஜி சேவை வழங்க அவசரம் காட்டும் மத்திய அரசு, இந் திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் -க்கு 4ஜி சேவையை வழங்க மறுக்கும் பாரபட்சத்தை கண் டித்து பிஎஸ்என்எல் ஊழியர்களின் கூட்டமைப்பு கண்டன இயக்கத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு உரிய தேதி யில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. ஆனால், ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவ னங்களுக்கு எவ்வித   கட்டுப்பாடுகளு மின்றி அனுமதியை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த பாரபட்ச நடவ டிக்கைகளை கண்டித்து பிஎஸ்என் எல் ஊழியர்கள் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஜூலை 16 முதல் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்று வதும், தொடர் போராட்டங்களில் ஈடு படுவது என அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.  இதனைத்தொடர்ந்து கோவை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பிஎஸ் என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே உள்ள பிஎன் என்எல் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு என்எப்டி மாவட்ட செயலர் ராபர்ட் தலைமை தாங்கினார். இதில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர்  சி.ராஜேந்திரன், எஸ்என்இஏ மாவட்டச் செயலாளர் குமரகுரு மற் றும் காவெட்டிரங்கன், குடியரசு, வடி வேல் உள்ளிட்ட அனைத்து சங்கத்தை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.  முடிவில்  அன்புதேவன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் ஏராள மானோர் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் மற்றும் பல்லடம் தொலை பேசி நிலையம் முன்பாக நடை பெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத் தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியம், ஓய்வூதியர் சங்க மாநில நிர் வாகி பா.சௌந்தரபாண்டியன், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

சேலம்

சேலம் ஜிஎம் அலுவலகம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் பிஎஸ்என்எல் எம்பி ளாய்ஸ் யூனியன் மாவட்டத் தலைவர் ஹரிஹரன், மாவட்டச் செயலாளர் கோபால், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் செல்வ ராஜூ, கிளை தலைவர்கள் மற்றும் நகர  கிளை செயலர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில்  உதகை, குன் னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர் ஜேக்கப் மோரீஸ், பொருளாளர் பிரின்ஸ், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.மகேஷ்வ ரன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கென்னடி மற் றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோ கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.

;