கோவை, அக்.2– மக்கள் ஒற்றுமையை சீர்குலைக் கும் மதவெறி சக்திகளை தனிமைப் படுத்துவோம், மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப்பிடிப்போம் என்கிற உறுதிமொழியேற்போடு புதனன்று பல்வேறு இடங்களில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் கோவை மாவட்டத்தில் துடியலூர், மணியகாரன்பாளையம், வடவள்ளி, சூலூர், காந்திபார்க், சுந்தராபுரம் உள் ளிட்ட 8 மையங்களில் மதச்சார்பின் மையை பாதுகாக்கும் உறுதிமொழி யேற்பு நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளரும், சிஐடியு மாவட்ட தலைவருமான சி. பத்மநாபன், சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் என்.பாலமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் யு.கே.சிவஞானம், செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, திராவிடதமிழர் கட்சி யின் வழக்கறிஞர் சி.வெண்மணி மற்றும் வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற் றும் தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் காந்தி பிறந்த நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஏ.ராதிகா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் செயலாளர் முகமதுமுசீர், எஸ். கருப்பையா, எஸ்.புனிதா உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற் றனர். இதேபோல், மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் பல்வேறு இடங்களில் காந்தி பிறந்தநாள் விழா வெகு சிறப் பாக நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உள் ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங் கேற்றனர். இதேபோல், கோவை தொழிற் நுட்ப கல்லூரியில் சுற்றுசூழல் பாது காப்பு குறித்து நாட்டு நலம் பணித்திட்ட (என்எஸ்எஸ்) மாணவர்கள் மற் றும் பொதுமக்கள் பங்கேற்ற கலந் துரையாடல் நடைபெற்றது. இத னைத்தொடர்ந்து ஆச்சனூர்குளம், முத்துக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சில் டாக்டர் தங்கராஜ், கணிதவியல் பேராசிரியர் ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரியில் உள்ள காந்தி சிலைக்கு சமூக நல்லினக்கமேடை யின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார் மாலை அணிவித்தார். உடன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் எம்.முத்து, சமூகநல்லிண மேடை பொறுப்பாளர் இ.பி.பெருமாள் ஆகியோர் பங் கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழுவின் சார்பில் காந்தி பிறந்த தினைத்தை முன்னிட்டு வெப்படை பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஆறு மாத காலமாக இந்த நிழல் கூட பொதுமக்கள் பயன்படுத்த முடி யாமல் குப்பைகளால் சுகாதாரம் இல்லாமல் பயங்கர துர்நாற்றத்துடன் இருந்ததால் பொதுமக்கள் வந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனை வாலிபர் சங்கத்தின்ர் பயணி கள் நிழல் கூடத்தை சுத்தம் செய்து உழைப்பு தானம் பணியில் இடு பட்டனர். இதில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் செந்தில், கிளைத் தலைவர் கோகுல், செயலாளர் பாலமுருகன் மற்றும் தீபன், பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி யில் உள்ள காந்தியின் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் மலர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.இஷரத்தலி, மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோபிசெட்டிபாளையம் காந்திய அறக்கட்டளை மற்றும் காந்தி மன்றத் தின் சார்பில் மகாத்மாகாந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட் டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தனர். இந் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கிடு, காந்திய அறக் கட்டளை தலைவர் சின்னச்சாமி, பொருளாளர் செந்தில்குமார், செய லாளர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் மற்றும் காந்தியவாதிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.