tamilnadu

img

பி.ஆர்.நடராஜனின் வெற்றிக்கு பாடுபடுவோம் சிங்கை தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் உறுதியேற்பு

கோவை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வெற்றிக்கு பாடுபடுவோம் என சிங்கை தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழாவில் செயல்வீரர்கள் உறுதியேற்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புதனன்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா ஹோப்காலேஜ் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சிங்கை சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தலைமை வகித்தார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி எம்.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற கழகத்தின் உயர் மட்டகுழு உறுப்பினர் ஆடிட்டர் அர்சுணன், கொங்குநாடு மக்கள் தேசியகட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.தனபால் ஆகியோர் பங்கேற்று பி.ஆர்.நடராஜனின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என எழுச்சி உரையாற்றினர். நிறைவாக, வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஏற்புரையாற்றினார். முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக வழக்கறிஞர் அருள்மொழி,எஸ்.எம்.சாமி, வெ.கோவிந்தராஜ், காங்கிரஸ் சார்பில் பி.பாஸ்கர், பழையூர் செல்வராஜ், ஏ.கருணாகரன், சிபிஐ மு.வ.கல்யாணசுந்தரம், ஜி.நாராயணசாமி, திமுக இரா.க.குமரேசன், சூரி.நந்தகோபால், தங்கவேல், வெள்ளிங்கிரி, கொமதேக சார்பில் கே.வடிவேல், மணிவண்ணன், கருப்புசாமி, விசிக பொன்.மனோகரன், சிங்கை.மோகன், விடுதலை அன்பன், பாஸ்கரன் மற்றும் சிபிஎம் சிங்கை நகரச் செயலாளர் வி.தெய்வேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் கே.மனோகரன் நன்றி கூறினார்.

;