districts

img

சிபிஎம் சீர்காழி ஒன்றியக்குழு அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறை, மார்ச் 26- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி யில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத் திறப்பு விழா மற்றும் சிறப்புப் பேரவை ஒன்றியச் செயலாளர் கே.அசோ கன் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தை மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் திறந்துவைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்  சன், ஜி.வெண்ணிலா, ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றி னர். ஒன்றியச் செயலாளர்கள் டி .ஜி.ரவிச் சந்திரன், கே.கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமுல்காஸ்ட்ரோ, நூர்ஜகான், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.இளங்கோவன், எஸ்.ஞானபிரகாசம்,  எம்.கரிகாலன், டி.வி.குமார், எம்.பாலு, எம். பிரபாகரன், விவசாயிகள் சங்க மாவட்டப்  பொருளாளர் எம்.செல்லப்பன், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன், வழக்கறிஞர் ஞானபிர காசம் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.