உடுமலை, ஜூன் 14- மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்காமல் வீணடிப்பதால், கோடைக்காலத்தில் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலையில் உள்ளது அமராவதி அணை. இந்நிலையை போக்க அமராவதி அணைக்கு மேல் உள்ள அப்பர் அமராவதியில் நீர் தேக்கும் திட் டத்தை செயல் படுத்த வேண்டும் என கோரிக்கை தற்பொழுது எழுந் துள்ளது. கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மூணாறு மலைப் பகுதி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை வனப்பகுதியிலிருந்து உற்பத்தி யாவது அமராவதி ஆறு. அமராவதி ஆறு காவிரியின் முக்கிய உப நதி களில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு உருவாகும் அமராவதி ஆற்றின் குறுக்கே உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 335 மீட்டர் உயரத்தில் 1957ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள் ளது. இந்த அணை 90 அடி உயரத் தில் சுமார் 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையாகும்.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகள்
அமராவதி அணைக்கு கேரள மாநிலத்தில் இருந்து வரும் பாம் பாற்று நீர் தான் பிரதானதாக உள்ளது. அதே போல் தேனாறு , சின் னாறு ஆகிய ஆறுகள் இணைந்து ஒன்றாக சேருவது தான் அமரா வதி ஆறாகும். அமராவதி அணையில் இருந்து வெளியேறும் நீர் ஆற்றில் செல் லும் போது சில உப ஆறுகள் அமரா வதி ஆற்றில் கலக்கிறது. அவற்றில் குதிரையாறு, சண்முகநதி, நங் காஞ்சியாறு போன்ற ஆறுகளின் மூலம் மேலும் கணிசமான அளவு தண்ணீர் கிடைக்கின்றது.
பாசனம் பெரும் பகுதிகள்
அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதி 839 சதுர கிலோ மீட்ட ராகும். இந்த அணையில் 9.06 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தண் ணீரை தேக்கி வைக்க முடியும். திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு அமராவதி அணை யின் இருந்து பிரதான ஒன்பது ஷட்டர்கள் வழியாக புதிய பிர தான கால்வாய் மற்றும் ராமகுளம் கால்வாய் மற்றும் ஆற்றின் மூல மாகவும் 22 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெற முக்கிய பங்கு வகுக் கிறது.
அப்பர் அமராவதி திட்டம்
அமராவதி அணைக்கு நீர் ஆதார மாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட மூன்று ஆறுகள் கூட்டாறு என்ற இடத்தில் இணைந்து அமராவதி ஆறாக மாறு கிறது. மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடத்தில் இருந்து அணைக்கு பயணிக்கும் இடைவெளியில் தூவானம் என்ற இடத்தில் இருந்து கீழ் நோக்கி அருவியாக மாறி மீண்டும் ஆறாக செல்கிறது. இப்படி தூவானம் அருவியாக மாறும் இடத்தில் தான் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அமராவதி அணை என்ற பெயரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அப்பர் அமராவதி அணையின் நன்மைகள்
அமராவதி அணைக்கு மேல் அப்பர் அமராவதி அணை கட்டு வதன் மூலம் வருடந்தோறும் வீணாக கடலில் கலக்கும் ஐந்து டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் நீர் மின்சாரம் உற் பத்தி செய்ய முடியும். கோடை காலங்களில் அப்பர் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்ல முடியும். இதனால் வறட்சி காலங்களில் குடிநீருக்காக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க முடியும். இதுகுறித்து பொது பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அமராவதி அணைக்கு மேல் மழை காலங்களில் உபரியாக வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில் அப்பர் அமராவதி என்ற பெயரில் அணை கட்ட முடிவு செய்யப் பட்டது. இதற்காக சுமார் 600 ஏக்கர் நிலம் என்பது அடர்ந்த வன பகுதி யாகும். மேலும் வன விலங்கு சர ணாலயமாக இருப்பதால் பல்வேறு துறைகளில் அனுமதி பெற பல் வேறு சட்ட சிக்கல் உள்ளதாக தெரி வித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கை
அமராவதி அணை கட்டும் போது ராமகுளம் மற்றும் ஆற்று பாசனம் மட்டுமே இருந்தது. தற் போது புதிய வாய்க்கால் மூலம் பாசன பரப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் அமராவதி பாசன பகுதி என்பது நெல் மற்றும் கரும்பு என விவசாயம் செய்யும் நஞ்சை நிலமாக இருந்த விளை நில மாகும். தற்போது மக்காச்சோளம், காய்கறிகள் என விவசாயம் செய்யும் புஞ்சை நிலமாக மாறியுள்ளது. அதே போல் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலைமை தான் உள்ளது. இது போன்ற நிலை வரக்கூடாது என்றுதான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் அமராவதி அணைக்கு மேல் தடுப்பு அணை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை தமிழக அரசு எந்த நடவ டிக்கையும் எடுக்காத காரணத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்க உடனடி யாக அப்பர் அமராவதி அணையை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கே.மகாதேவன்