tamilnadu

img

வாலிபர் சங்க அமைப்பு தினம் அனைவருக்கும் வேலை, கல்விக்கான போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்பு

கோவை, நவ. 3– வாலிபர் சங்கத்தின் அமைப் புதினத்தை முன்னிட்டு கோவை யில் பல்வேறு பகுதிகளில் வாலிபர் சங்கத்தினர் வெண் கொடியேற்றி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை எழுச்சிகரமாக கொண்டாடினர். அனைவருக்கும் வேலை, கல்வி என்கிற முழக்கத்தோடு 1980 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம்  தேதி பஞ்சாப் மாநிலம் லூதியா னாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட் டது. இந்திய நாட்டின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாய், இந்திய இளைஞர்களை ஈரத்த அமைப் பாய் திகழ்கிற வாலிபர் சங்கத் தின் நடவடிக்கைள் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப டுத்தி வருகிறது. இளைஞர்களின் நலனுக்கான போராட்டம் மட்டுமின்றி ரத்ததானம், உழைப்பு தானம் உள்ளிட்ட மக்கள் சேவை களால் மக்களின் பேராதரவை பெற்ற அமைப்பாய் வாலிபர் சங் கம் திகழ்கிறது. இவ்வமைப்பின் 40 ஆம் ஆண்டு அமைப்பு தினம் ஞாயிறன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை  மாவட்டத்தில் உள்ள வாலிபர் சங்க கிளைகளில் சங்கத்தின் வெண் கொடியேற்றி உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அனைவருக்கும் சட்ட சமூக பாதுகாப்பான வேலை,  சமச்சீரான கல்வி என்கிற முழக் கத்தை தீவிரமாக முன்னெடுப்பது என்கிற உறுதியேற்பு நிகழ்ச்சி  வாலிபர் சங்கத்தினர் மேற்கொண் டனர். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கன கராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன் றிய, தாலுகா, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உற்சா கமாக பங்கேற்றனர்.

;