tamilnadu

அவிநாசி ஒன்றியத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அவிநாசி, டிச. 30- அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள் ளாட்சித் தேர்தலில், விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்தில் 58,607 ஆண் வாக்காளர்கள், 60,445 பெண் வாக்காளர்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 1,19,060 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 31 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 270 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 19 ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள்,  2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போத்தம்ப பாளையம் ஊராட்சி மன்றத் தலை வர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கு 52  பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  இந்நிலையில், 195 வாக்குச் சாவ டிகள், 400 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கூடு தல் தேவைக்காக 195 வாக்குப் பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தன. வாக்குச் சாவடி மையங்களை ஓட்டி 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேவூர் ஊராட்சியில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந் தது. 

தேர்தலுக்காக மட்டும் திறக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி

அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபாளையம் ஊராட்சி காரைக் குட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை போதுமான அளவு இல்லா ததால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தற்போது சட்டப் பேரைவத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவிற்காக பள்ளி, வாக்குச்சாவடியாகத் திறக்கப்பட் டது. 

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்கள்

காலை 9 மணி வரை 13 சதவிகி தம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்க ளிக்க வந்ததால், வாக்குப்பதிவு அதி கரித்தது. மாலை மூன்று மணி நிலவரப்படி 56.98 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான பெரியாயிபாளையம் திரு வள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.

;