tamilnadu

மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

தருமபுரி, மே 27-அரூர் அருகே மான் வேட்டையாடிதாக இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து  தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.தருமபுரி மாவட்டம், அரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அ.பள்ளிப்பட்டி எனுமிடத்தில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகமான முறையில் வந்த ஒரு இருசக்கர வண்டியை சோதனை செய்ததில் மான் வேட்டையாடி அதன் இறைச்சிகளை இருவர் எடுத்துச் செல்வது தெரியவந்தது.விசாரணையில், தருமபுரி மாவட்டம், ஆவாரங்காட்டூரைச் சேர்ந்த சந்திரன் மகன் ஞானசேகரன் (30), மல்லாங்குட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமு (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக ஞானசேகரன், ராமு ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

;