ஊத்துக்குளி பகுதி கால்நடை மருந்தகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
திருப்பூர், ஆக. 2– ஊத்துக்குளி பகுதியில் கால் நடை மருந்தகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக் குளி தாலுகா செயலாளரும், புஞ்சை தளவாய்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்க தலைவருமான எஸ்.கே.கொளந்தசாமி திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியரின் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத் தில் விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் கால்நடை களை வைத்துப் பராமரித்து வருகின்றனர். குறிப்பாக கறவை மாடுகள், எருமைகள், ஆடுகள், கோழி இனங்களை வளர்த்து வருகின்றனர். இவைகள் விவ சாயிகளின் பொருளாதாரத்திலும் கணிசமான பங்கு வகித்து வரு கின்றன. இந்த கால்நடைகளுக்கு நோய் வந்தால் அரசு கால்நடை மருந்தகங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு போதுமான மருத்துவர்கள், பணி யாளர்கள் இல்லை. இதனால் தனியார் மருத்துவர்களை அணுகி, அவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்குப் பெருந்தொகை செலவாகிறது. இதனால் விவசாயி களுக்குப் பொருளாதார இழப்பும், நோயுற்ற கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில் உயிரிழப்பும் ஏற்படு கின்றன. இந்நிலையில், ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியி டத்தில் ஒரு இடம் காலியாக உள் ளது. இதேபோல், புஞ்சை தள வாய்பாளையம் கால்நடை மருந்த கத்தில் கால்நடை ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. பாப்பம்பாளையம் கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத் துவர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே இந்த பணி யிடங்களை உடனடியாக நிரப்பி கால்நடைகளுக்கு உரிய நேரத் தில் சிகிச்சை கிடைக்கவும், விவ சாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கேட்டுக் கொண்டார்.
உடுமலையில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்
உடுமலை, ஆக. 2- உடுமலை புத்தகாலயம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 8ஆவது உடுமலை புத்தகத் திருவிழா தளி சாலையில் உள்ள தேஜஸ் மஹாலில் (நகராட்சி திருமண மண்டபம்) இன்று தொடங்க உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் ஐம்பதுக்கும் மேற் பட்ட பதிப்பகங்கள் சார்பில் தத்துவம், அரசியல், பொருளா தாரம், ஆன்மிகம் மற்றும் குழத்தைகளுக்கான புத்தகம் லட்சக்கணக்கான தலைப்பில் புத்தகங்கள் மற்றும் குறுந் தகடுகள் காட்சி, விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தகம் வாங்கும் அனைவருக்கும் பத்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு தலைப்பு களில் கருத்துரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து வரவேற்புக்குழு செயலாளர் சக்திவேல் கூறும்போது, உடுமலை நகரில் கடந்த எழு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சி யாக எட்டாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை முதல் வரும் ஆக.12 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறு கிறது. முதல் நாள் புத்தக திருவிழா உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியுடன் தொடங்கும். நிகழ்ச்சியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மேலும், உடுமலை நகரில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்களின் கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தினமும் மாலை நேரங்களில் நடைபெரும் கருத்துரை நிகழச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.